தமிழ்நாடு

“தூத்துக்குடி அருகே காதல் திருமணத்தை ஏற்காமல் இரட்டைக் கொலை” - தனிப்படை அமைத்து தேடியதில் 3 பேர் கைது!

தனது தங்கை காதல் திருமணம் செய்ததை ஏற்காமல் அரிவாளால் வெட்டியதில் இருவர் பலியாகினர். குற்றவாளிகள் மூவரை கைது செய்தது போலிஸ்.

“தூத்துக்குடி அருகே காதல் திருமணத்தை ஏற்காமல் இரட்டைக் கொலை” - தனிப்படை அமைத்து தேடியதில் 3 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தனது சகோதரியின் காதல் திருமணத்தை ஏற்க இயலாத இளைஞர் புதுமாப்பிள்ளையும், அவரது சகோதரர் பெற்றோரையும் அரிவாளால் வெட்டியதில் இருவர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளையைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 55). இவரது மகன் விக்னேஷ் (வயது 21), இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகள் சங்கீதா (வயது 20) என்பவரும் காதலித்து கடந்த 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்திற்கு சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்க ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இரு குடும்பத்தினர் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் முத்துராமலிங்க ராஜா, அவரது சித்தப்பா மகன் முத்துச்சுடர் மற்றும் அவர்களது நண்பர் அருணாச்சலம் ஆகிய 3 பேரும் சேர்ந்து விக்னேஷ், அவரது தந்தை லட்சுமணன், விக்னேஷின் நண்பர் அருண் ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனைப் பார்த்த விக்னேஷின் தாயார் முத்துப்பேச்சி தடுக்க முயன்றுள்ளார். இதனால் அவரையும் வெட்டியுள்ளனர்.

“தூத்துக்குடி அருகே காதல் திருமணத்தை ஏற்காமல் இரட்டைக் கொலை” - தனிப்படை அமைத்து தேடியதில் 3 பேர் கைது!

இதில் முத்துப்பேச்சி (வயது 45) மற்றும் அருண் (வயது 20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விக்னேஷ் மற்றும் அவரது தந்தை லட்சுமணன் ஆகிய இருவரும் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரிவாளால் வெட்டிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்த இரட்டைக் கொலையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏரல் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடியதில், 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories