தமிழ்நாடு

3வது நாளாக 2,000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு : இன்று மட்டும் 41 பேர் பலி! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,449 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 40 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மொத்த பாதிப்பு 54,449 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் மட்டும் 1,322 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 38,327 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27,537 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை தமிழகத்தில் 8,27,980 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

3வது நாளாக 2,000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு : இன்று மட்டும் 41 பேர் பலி! #CoronaUpdates

இன்று சென்னையில் 29 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும், திருநெல்வேலியில் 2 பேரும், ராமேஸ்வரம், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல், கடலூர், ஓசூரில் தலா ஒருவரும் என மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,630 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 30,271 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 23,509 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories