தமிழ்நாடு

“எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதுபோல அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே சிறந்த வழி” - வைகோ வேண்டுகோள்!

எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

“எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதுபோல அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே சிறந்த வழி” - வைகோ வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா நோய்த் தடுப்பில் மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கைகள் எடுக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை எம்.பி-யுமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ, வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

“கொரோனா பெருந்தொற்று கொள்ளை நோயாக மாறி, உயிர்களைப் பலிவாங்கி வருகிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது. மத்திய - மாநில அரசுகள் நிவாரணம் அறிவித்து இருந்தாலும், பொதுமக்கள் எதிர்காலமே இருண்டு, ஆபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் பதட்டத்தோடு இருக்கிறார்கள்.

தனிமைப்படுத்துதல் என்பது அன்றாடங்காய்ச்சிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும், குடிசைகள், ஓட்டு வீடுகளில் வாழ்பவர்களுக்கும் மிகப் பெரிய அறைகூவலாக உள்ளது.

“எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதுபோல அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே சிறந்த வழி” - வைகோ வேண்டுகோள்!

பொதுமக்கள் மனதில் அச்சத்தை, கவலையைப் போக்கி நம்பிக்கையை ஊட்ட வேண்டும். ஆளும் கட்சியும், அரசும் மட்டுமே இதைச் செய்துவிட முடியாது. கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் தோளோடு தோள் நின்று ஒன்றுபட்டு இந்தக் கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும்.

எனவே தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சரியான யோசனையைச் சொல்லி இருக்கிறார்.

நெருக்கமாக அமராமல், தனித்தனியாக அமருகின்ற வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்து, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்வது மிகவும் இன்றியமையாதது ஆகும்.

மாற்று ஏற்பாடாக காணொளி சந்திப்பு (வீடியோ கான்பிரன்ஸ்) மூலமும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தலாம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த அபாயகரமான சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையை ஏற்றுச் செயல்படுவது ஒட்டுமொத்தப் பொதுமக்களும் அச்சத்திலிருந்து விடுபடும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.”

இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories