தமிழ்நாடு

தொழிலாளர்களை நெருக்கமாக வரிசையில் நிற்கவைத்து உணவு வழங்கிய அவலம் - சமூக விலகலை கடைபிடிக்காத அரசு முகாம்!

அரசு முகாமில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும்போது சமூக விலகலைக் கடைபிடிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 681 ஆக உயர்ந்துள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் முதல் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அனைத்துவகையான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்துவருகின்றன.

இதுஒருபுறம் இருக்க தினசரி கூலி தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு, பல இடங்களில் அந்தந்த மாநில அரசுகளின் சார்பில் உணவு வழங்கப்படுகிறது. ஆனாலும் அங்கு முறையாக சமூக விலகலை கொண்டுவரமுடியவில்லை என்று கூறப்படுகிறது.

அந்தவகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அரசு தற்காலிக முகாம் ஏற்படுத்தியுள்ளது. அந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட வெளிமாநில ஊழியர்கள் மற்றும் சாலைகளில் வசிப்பவர்கள், ஆதரவற்ற கூலி தொழிலாளர்கள் என பலரும் தங்கியுள்ளனர்.

அவர்களுக்கு உணவு வழங்கச் சென்ற அதிகாரிகள், கொரோனா சமூக விலகல் குறித்து எந்த வித விழிப்புணர்வு நடவடிக்களையும் கடைபிடிக்காமல் உணவு வழங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உணவுக்காக நீண்ட வரிசையில் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும் நெருக்கமாகவும் நிற்கின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அரசு முகாமில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும்போது சமூக விலகலைக் கடைபிடிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அரசு அறிவுறுத்தி வரும் சமூக விலகலை அதிகாரிகளே மீறுவதா எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories