தமிழ்நாடு

"LKG, UKG குழந்தைகளுக்கான கொரோனா விடுமுறை நிறுத்திவைப்பு” - பல் இளிக்கும் எடப்பாடியின் விளம்பர வெறி!

‘கொரோனா காரணமாக விடுமுறை’ உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்குப் பின்னணியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விளம்பர வெறி இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

"LKG, UKG குழந்தைகளுக்கான கொரோனா விடுமுறை நிறுத்திவைப்பு” - பல் இளிக்கும் எடப்பாடியின் விளம்பர வெறி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் 85-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதையொட்டி, தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்றைத் தவிர்க்கும் விதமாக தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, வகுப்புகளுக்கு மார்ச் 16 முதல் வரும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக பள்ளி கல்வித்துறை நேற்று மாலை உத்தரவிட்டது.

"LKG, UKG குழந்தைகளுக்கான கொரோனா விடுமுறை நிறுத்திவைப்பு” - பல் இளிக்கும் எடப்பாடியின் விளம்பர வெறி!

மேலும், கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், நீலகிரி, தென்காசி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை நிறுத்தி வைக்க பள்ளிக் கல்வித்துறை , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்குப் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விளம்பர வெறி இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தக் கோரி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்தின. ஆனால், அ.தி.மு.க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றிய விவரங்களை தெளிவாக எடுத்துரைக்கவில்லை.

"LKG, UKG குழந்தைகளுக்கான கொரோனா விடுமுறை நிறுத்திவைப்பு” - பல் இளிக்கும் எடப்பாடியின் விளம்பர வெறி!

இதையடுத்து, சட்டப்பேரவையிலேயே பள்ளி விடுமுறை அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டிருந்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், கொரோனா தாக்கத்தின் தீவிரம் கருதி பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவிப்பை உடனடியாக வெளியிட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவை திங்கட்கிழமை கூடும்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுமுறையை அறிவிப்பதற்காக, தற்போதைய உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பிஞ்சுக் குழந்தைகளின் உடல்நல விவகாரத்தில் கூட விளம்பர வெறியோடு செயல்படும் அ.தி.மு.க அரசு மீது பெற்றோர்களும், பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories