தமிழ்நாடு

இருண்டுகிடக்கும் நாடு... எப்போது புலரும் புத்தாண்டு? - முரசொலி தலையங்கம்!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி ஆட்சியில் நாடு 2019-ல் இரண்டு மூன்று பட்ஜட்களைக் கண்ட விநோதம் கோலாகலமாக அரங்கேறியது. இருப்பினும் என்ன? பின்னடைவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய பொருளாதாரம் மீட்கப்படவே இல்லை.

‘ஜி.டி.பி’ எனப்படும் ஒட்டுமொத்த உற்பத்தி சதவிகிதம், 4.5 சதவிதமாகத் தாழ்ந்துவிட்டது. கடந்த 45 ஆண்டுகள் காணாத அளவுக்கு, வேலைவாய்ப்பின்மை வாயை அகலத் திறந்து கொண்டுவிட்டது.

கடன்களும், செலுத்தவேண்டிய வட்டித் தொகையும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எக்கச்சக்கமாக எகிறிவிட்டது. நிதிப் பற்றாக்குறை – வருவாய்ப் பற்றக்குறை ஆகியவை விபத்தில் சிக்கிக்கொண்டு விட்டன. வளர்ச்சிப் பணிகளுக்கு ஒவ்வொன்றாகப் பெயர் இடப்படுகிறதே தவிர, அவை வயிறுகள் காய்ந்துவிட்டன.

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க வினரும் கொள்ளை, கொலை குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி ஊழல் – லஞ்சச் சகதியில் மூழ்கியிருக்கின்றனர். இந்த மத்திய மாநில அரசுகளைப் பற்றி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். இந்த ஆட்சிகளில் மாநில உரிமைகளுக்கு மதிப்பில்லை; மக்களாட்சி மாண்புகளுக்கு மரியாதை இல்லை; வெகு மக்கள் நலன் சார்ந்த சிந்தனையே இல்லை.

குறிப்பாக இருட்டுக்கு குழந்தையாய்ப் பிறந்தது 2019; அதன் நீட்சியாக இன்றும் பிறக்கிறது 2020. என்று விடியுமோ? விடியலுக்கு ஒரே நம்பிக்கை தி.மு.க தான். மீட்டுருவாக்கும் ஒரே நாயகன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று முரசொலி கூறியுள்ளது.

banner