தமிழ்நாடு

5 மாதங்களில் 5 முறை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: அ.தி.மு.க அரசின் மீது சந்தேகம் எழுவதாக தலைவர்கள் கண்டனம்!

மதுரையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முறை மாவட்ட ஆட்சியர்களை மாற்றி, மாற்றி நியமனம் செய்துள்ள அரசின் நடவடிக்கைகள் ஆழமான சந்தேகங்களை உருவாக்குவதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

5 மாதங்களில் 5 முறை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: அ.தி.மு.க அரசின் மீது சந்தேகம் எழுவதாக தலைவர்கள் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை ஆட்சியர் நாகராஜன் அ.தி.மு.க அரசின் நெருக்கடியால், விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மதுரைக்கு புதிய ஆட்சியராக டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டதில் ஏதோ விவகாரம் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலின் போது, மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில், பெண் தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்ட அதிகாரிகள் நுழைந்த விவகாரத்தில், ஆட்சியராக இருந்த நடராஜன் மாற்றப்பட்டார். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, நாகராஜன் ஆட்சியராக பொறுப்பு ஏற்றார்.

மக்களவைத் தேர்தலின் போது மதுரையில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க சிறப்பு அதிகாரியாக மதுரை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் பெறுப்பெற்றார். அதன் பின்னர் தேர்தல் நாளில் ஆளும் கட்சி பல இடையூறுகள் செய்ய முயன்றப் போது அதனை சாதுரியமாக கையாண்டு பிரச்சனையை முடித்துவைத்தார்.

மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு பணி இடங்களுக்கு, நேரடியாக தேர்வு செய்யும் முறை மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு பணி ஆணை வழங்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

டி.ஜி.வினய்
டி.ஜி.வினய்

இதனை அறிந்த ஆட்சியர் நாகராஜன் அந்த பணியிடங்களுக்கு தேர்வான பணியாளர்கள் பட்டியலை தயார் செய்து, அந்த பட்டியலில் இருந்த 1500 பேருக்கும், இரவோடு இரவாக பணி ஆணை கொடுத்துள்ளார். சிபாரிசுகளை விரும்பாததால் நேரடியாகவே பணி ஆணைகளை வழங்கியுள்ளார்.

இதனால் அத்திரமடைந்த அ.தி.மு.க அமைச்சர்கள், ஆட்சியர் நாகராஜனுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்பட்டது. இந்த விவகாரங்கள் பேசப்பட்டு வந்த நிலையில், நாகராஜன் விடுப்பில் சென்றார்.

இந்நிலையில், தற்போது மதுரை புதிய ஆட்சியராக, அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டுள்ளார். இது மதுரை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாகராஜன்
நாகராஜன்

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் மாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாவட்ட ஆட்சியர்களை மாற்றுவது அரசின் கடமைப் பொறுப்பு. எனினும் ஆட்சி நிர்வாகத்தில் அரசியல் தலையீடு காரணமாக ஆட்சிப்பணி அதிகாரிகள் மாற்றப்படுவது நிர்வாகக் கட்டமைப்பை நிலைகுலைத்து விடும்.

கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முறை மாவட்ட ஆட்சியர்களை மாற்றி, மாற்றி நியமனம் செய்துள்ள அரசின் நடவடிக்கைகள் ஆழமான சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. ஆளும் கட்சியின் நிர்பந்தத்திற்கு பணியாத அலுவலர்களை பணி மாற்றம் செயது அரசின் அதிகார அத்துமீறல் நடவடிக்கை” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories