தமிழ்நாடு

விலைவாசி உயர்ந்து மக்களுக்கு சோதனையே வரும் - பட்ஜெட் குறித்து திருச்சி சிவா பேச்சு!

மத்திய பட்ஜெட்டால் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே லாபம் மக்களுக்கு இல்லை என திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்ந்து மக்களுக்கு சோதனையே வரும் - பட்ஜெட் குறித்து திருச்சி சிவா பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் முற்றிலும் மக்களுக்கு சோதனையை தரக்கூடியதாகவே அமைந்துள்ளது.

நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் அறிக்கை முழுவதுமே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதாரவாகவே அமைந்துள்ளது. ஏர் இந்தியா பங்குகளை விற்க முனைப்புக்காட்டுவது, தனியாருடன் கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது, நாடுமுழுவதும் தனியார் மயமாக்கலை ஊக்குவிப்பதாகவே உள்ளது.

தங்கம் மீதான கலால் வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 12.5% ஆக அதிகரித்திருப்பது, பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருப்பதன் மூலம் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதன்மூலம் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள் எனவும் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories