தமிழ்நாடு

வெற்றியை சிதம்பரம் தொகுதி மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் : - தொல்.திருமாவளவன் உருக்கம்

இந்திய தேசமே ஒரு திசைவழியில் பயணித்தாலும் தமிழகம் எப்போதும் சமூக நீதியின் வழியில் அறத்தின் வழியில் பயணிக்கும் என்பதை இந்த தேர்தல் உறுதிப்படுத்தியிருக்கிறது. என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வெற்றியை சிதம்பரம் தொகுதி மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் : - தொல்.திருமாவளவன் உருக்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிதம்பரம் மக்களவை தொகுதியில் சிதம்பரம் பானை சின்னத்தில் போட்டியிட்ட போட்டியிட்ட வி.சி.க வேட்பாளர் தலைவர் திருமாவளவன் 3219 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது குறித்து விடுதலை சிறுதலைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியீட்டுளார். அதில் அவர் கூறியதாவது;

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட என்னை வெற்றி பெற வைத்த மக்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியை சிதம்பரம் தொகுதி மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

5,00,229 வாக்குகளை மக்கள் அளித்திருக்கிறார்கள். இந்த வெற்றி ஒரு மகத்தான வெற்றி, மாபெரும் வெற்றி. அங்குலம் அங்குலமாக பகைசக்தியை விரட்டியடித்து இந்த வெற்றியை ஈட்டி இருக்கிறோம். எனவே, லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பதை விட அங்குலம் அங்குலமாக எதிர் அணியினரை விரட்டி 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம்.

இந்த வெற்றி அறத்தின் வெற்றி, மக்களுடைய வெற்றி. இந்த வெற்றியை எனக்கு வாரி வழங்கிய நான் உயிரினும் மேலாக நேசிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும், சிறுபான்மை சமூகத்தினருக்கும், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெற்றியை சிதம்பரம் தொகுதி மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் : - தொல்.திருமாவளவன் உருக்கம்

இந்தியாவிலேயே நள்ளிரவை தாண்டி முடிவு அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியாகத் தான் இருக்கும். ஏனென்றால் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையே சிதம்பரம் தொகுதியின் மீது தான் இருந்தது. சனாதன சக்திகள் என்னை தோற்கடிக்க 100 கோடிக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள். கட்சிகளும் சாதிவெறி சக்திகளும் கோடி கோடியாக கொட்டி இரைத்தார்கள், எனக்கெதிரான அவதூறு பிரச்சாரத்தை கடுமையாக மேற்கொண்டார்கள். அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்தவர்களும் மிகக்கடுமையாக உழைத்து இந்த வெற்றியை ஈட்டித்தந்திருகிறார்கள்.

அண்ணன் தளபதி ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், வாக்களித்த யாவருக்கும், என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

ஏற்கனவே நாங்கள் அறிவித்ததை போல சாதிவெறி சக்திகளுக்கு இடமில்லை என்பதை தமிழக மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். 38 இடங்களில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமளவு வெற்றிபெற்றாலும் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் எடுபடவில்லை. தமிழக மக்கள் வழங்கியிருக்கிற இந்த தீர்ப்பு தமிழ்மண் தமிழ்மண் தான், இங்கே சாதி வெறியர்களுக்கும் மத வெறியர்களுக்கும் இங்கே இடமில்லை என்பதை உணர்த்தி இருக்கிறது.

ஒட்டுமொத்த இந்திய தேசமே ஒரு திசைவழியில் பயணித்தாலும் தமிழகம் எப்போதும் சமூக நீதியின் வழியில் அறத்தின் வழியில் பயணிக்கும் என்பதை இந்த தேர்தல் உறுதிப்படுத்தியிருக்கிறது. என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories