விளையாட்டு

மெஸ்ஸியை தாண்டி சிறப்பாக ஆடிய அர்ஜென்டினா.. தனி ஒருவனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போலந்து ! ARGvsPOL

அர்ஜென்டின அணி 2-0 என்ற கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மெஸ்ஸியை தாண்டி சிறப்பாக ஆடிய அர்ஜென்டினா.. தனி ஒருவனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போலந்து ! ARGvsPOL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி தனது முதல் போட்டியில் சவூதி அரேபியாவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் அர்ஜென்டினா சவூதி அரேபியாவை ஊதித் தள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் தொடக்கம் முதலே அர்ஜென்டினாவின் கைதான் ஓங்கி இருந்தது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நடுகள வீரர் பாரடேஸை சவூதி அரேபிய வீரர் பெனால்டி பகுதியில் கீழே தள்ளி விட்ட நிலையில், அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடித்து அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தி கொடுத்தார்.

மெஸ்ஸியை தாண்டி சிறப்பாக ஆடிய அர்ஜென்டினா.. தனி ஒருவனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போலந்து ! ARGvsPOL

ஆனால் இது இரண்டாம் பாதியில் அப்படியே மாறியது. ஆட்டத்தின் 47-வது நிமிடதட்டில் சவூதி அரேபிய வீரர் சலாஹ் அல் ஷெக்ரி ஒரு கோலும் 52-வது நிமிடத்தில் சவூதி அரேபிய வீரர் சலீம் அல் டவ்சரி மற்றொரு கோலும் அடித்தனர். இதற்கு அர்ஜென்டின அணியால் பதில் கோல் அடிக்கமுடியாத நிலையில் சவூதி அரேபிய 2-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை பெற்றது.

அதைத் தொடர்ந்து தனது இரண்டாவது லீக் போட்டியில் அர்ஜென்டின அணி தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் வலுவான மெக்ஸிகோ அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அர்ஜென்டினா அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு குறிப்போடு இருக்கும் என்பதால் இந்த போட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

மெஸ்ஸியை தாண்டி சிறப்பாக ஆடிய அர்ஜென்டினா.. தனி ஒருவனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போலந்து ! ARGvsPOL

இதன் காரணமாக ஆரம்பத்தில் இருந்தே அர்ஜென்டினா அணி அதிரடியாக ஆடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மெக்ஸிகோவின் தடுப்பரண் மிக மிக வலுவாக அமைந்தது. அதனை உடைத்து முதல் பாதி முழுக்க அர்ஜென்டினா வீரர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. இதனால் முதல் பாதி கோல் முடிக்கப்படாமல் சமனில் முடிவடைந்தது.

இதனால் இரண்டாம் பாதி தொடங்கின்போது அரங்கில் குழுமியிருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் கூட சோகத்தில்தான் இருந்தனர். முதல் பாதியில் இருந்த உற்சாகத்தில் பாதிகூட அவர்களிடம் இல்லை. அர்ஜென்டின வீரர்கள் முகாமிலும் அந்த கவலை தெரிந்தது.

மெஸ்ஸியை தாண்டி சிறப்பாக ஆடிய அர்ஜென்டினா.. தனி ஒருவனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போலந்து ! ARGvsPOL
Natacha Pisarenko

இது எல்லாம் ஆட்டத்தின் 63-வது நிமிடம் வரை மட்டும்தான். அந்த நிமிடத்தில் இடதுபுறத்தில் இருந்து டி மரியா கொடுக்க பாஸை பெனால்டி பாஸ்க்கு வெளியே இருந்து கோல் போஸ்டின் இடதுபக்கத்தை நோக்கி மெஸ்ஸி அடித்த பந்து கோல் கீப்பரை தாண்டி கோலாக அடுத்த நொடி அரங்கமே அதிர்ந்தது. பின்னர் ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பு அர்ஜென்டினா அணிக்கு கிடைத்தது.

ஆனால், இதனை நேரடியாக பெனால்டி பாஸ்க்கு அடிக்காமல் மெஸ்ஸிக்கு பாஸ் அளித்தார் டீ பால். அந்த பந்தை மெஸ்ஸி என்ஸோ பெர்னாண்டஸ்க்கு கொடுக்க அவர் அதனை அழகாக கோலாக மாற்றினார். இதன் மூலம் இந்த போட்டியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற அர்ஜென்டினா அணி மேற்கொண்டு மெக்ஸிகோ அணியை கோல் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டது.

முடிவில் 2-0 என்ற கணக்கில் இந்த போட்டியில் வெற்றிபெற்ற அர்ஜென்டினா அணி அடுத்த சுற்று வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. இந்த நிலையில் முக்கியமான கடைசி லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி போலந்தை எதிர்கொண்டது. இதில் வெற்றிபெற்றால் அடுத்த சுற்றி உறுதி அதேபோல தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேற்றம் என்ற நிலையில் அர்ஜென்டினா களம் கண்டது.

மெஸ்ஸியை தாண்டி சிறப்பாக ஆடிய அர்ஜென்டினா.. தனி ஒருவனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போலந்து ! ARGvsPOL

முந்தைய போட்டிகளை போல அல்லாமல் இந்த போட்டியில் அர்ஜென்டின அணியின் வீரர்கள் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டியின் தொடக்கத்தில் இருந்து அர்ஜென்டினா அணி வீரர்கள் போலந்து அணியின் கோல் போஸ்டை முற்றுகையிட்டு கொண்டே இருந்தனர். ஆனால் அதனை போலந்து கோல் கீப்பர் தடுத்து அணியை காப்பாற்றிவந்தார்.

பின்னர் ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் போலந்து கோல் கீப்பர் செய்த தவறால் அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை மெஸ்ஸி கோலாக மாற்றி அணியை அடுத்த சுற்றுக்கு அழைத்துச்செல்வார் என ரசிகர்கள் எதிரிபார்த்த நிலையில், மெஸ்ஸியின் ஷாட்டை போலந்து கோல் கீப்பர் செசஸ்னி அபாரமாக தடுத்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக உலகக் கோப்பையில் இரண்டு முறை பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்டவர் என்ற மோசமான சாதனை மெஸ்ஸிக்கு கிடைத்தது.

மெஸ்ஸியை தாண்டி சிறப்பாக ஆடிய அர்ஜென்டினா.. தனி ஒருவனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போலந்து ! ARGvsPOL

எனினும் மனம் தளராத அர்ஜென்டின வீரர்கள் தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கியவண்ணம் இருந்தனர். எனினும் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. பின்னர் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய முதலாவது நிமிடத்திலேயே மோலினா கொடுத்த பாஸை அர்ஜென்டின வீரர் அலிஸ்டர் கோலாக்கி அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். உண்மையில் இது துல்லியமான ஷாட் மூலம் வந்த கோல் அல்ல, ஒருவேளை துல்லியமான ஷாட்டாக இருந்திருந்தால் போலந்து கோல் கீப்பர் செசஸ்னி நிச்சயம் அதனை தடுத்திருப்பார்.

அதனைத் தொடர்ந்து 66-வது நிமிடத்தில் என்ஸோ பெர்னாண்டஸ் கொடுத்த மிக அழனாக பாஸை ஆல்வரேஸ் வலிமையான ஷாட் மூலம் கோலாக்கினார். அதன்பின்னரும் அர்ஜென்டினா வீரர்கள் மிக அழகாக அவ்வப்போது கோலுக்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இறுதிவரை போலந்து வீரர்களால் பதில் கோல் அடிக்கமுடியாத நிலையில், அர்ஜென்டின அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

மெஸ்ஸியை தாண்டி சிறப்பாக ஆடிய அர்ஜென்டினா.. தனி ஒருவனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போலந்து ! ARGvsPOL

முந்தைய போட்டிகளை போல அல்லாமல் உண்மையில் இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமான துல்லியமாக ஆடியது. மெஸ்ஸியை மட்டும் சுற்றி இல்லாமல் அனைத்து வீரர்களும் தனித்தனியாக சிறப்பாக ஆடினர். ஒருவேளை இந்த போட்டி சமனில் முடிவடைந்திருந்தால் அர்ஜென்டினா ரவுண்டு 16 சுற்றில் வலிமையான பிரான்ஸ் அணியை சந்திக்கவேண்டியிருந்திருக்கும். ஆனால் வெற்றிபெற்றதன் மூலம் குழுவில் முதல் இடம் பிடித்து அடுத்த சுற்றில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்கவுள்ளது.

இந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் போலந்து அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதற்கு காரணம் அந்த அணியின் கோல் கீப்பர் ஆல்வரேஸ்தான். அவர் மட்டும் இல்லை என்றால் இந்தப்போட்டியில் அர்ஜென்டினா அணி குறைந்தபட்சம் 4 கோலாவது அடித்துஇருக்கும். குறைந்த பட்சம் போலந்து அணி இன்னும் ஒரு கோல் வாங்கியிருந்தால் கூட அந்த அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியிருக்கும். ஆனால் ஆல்வரேஸால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அடுத்த சுற்றில் அந்த அணி வலிமையான நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை சந்திக்கவுள்ளது.

banner

Related Stories

Related Stories