விளையாட்டு

இந்திய அணியில் ஒதுக்கப்படுகிறாரா விராட் கோலி ?-வெளியான விளம்பரத்தால் சர்ச்சை..BCCI மீது பாயும் ரசிகர்கள்

விளம்பர வீடியோவில் கோலி இல்லாத நிலையில், இந்திய அணியில் இருந்து விராட் கோலி ஒதுக்கப்பட்டே வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அணியில் ஒதுக்கப்படுகிறாரா விராட் கோலி ?-வெளியான விளம்பரத்தால் சர்ச்சை..BCCI மீது பாயும் ரசிகர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் இந்திய அணி கண்ட சிறப்பான பேட்ஸ்மேன் என்றால் அது விராட் கோலிதான். தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விராட் கோலி திகழ்ந்து வருகிறார்.

தோனியின் ஓய்வுக்கு பின்னர் மூன்று வகையான தொடர்களிலும் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற கோலி இந்திய அணியை அப்படியே மாற்றிக்காட்டினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை மிகச்சிறப்பாக மாற்றிய கோலி வெளிநாடுகளிலும் இந்திய அணி வெற்றிபெற முடியும் என நிரூபிக்க வைத்தார்.

இந்திய அணியில் ஒதுக்கப்படுகிறாரா விராட் கோலி ?-வெளியான விளம்பரத்தால் சர்ச்சை..BCCI மீது பாயும் ரசிகர்கள்

மேலும், தனது ஆக்ரோஷ பாணியை இந்திய அணிக்குள் புகுத்தி இந்திய அணியின் தோற்றத்தையே மாற்றினார். ஆனால், உலகக்கோப்பை உள்ளிட்ட முக்கிய சர்வதேச தொடரில் சோபிக்கத் தவறியதால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கோலியை பிசிசிஐ சரியாக மதிக்கவில்லை என புகார்கள் எழுந்தன. கேப்டன் பதவி பறிப்பு விவகாரத்தில் பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி மற்றும் விராட் கோலி இடையே மாறுபாடான கருத்துக்கள் வந்தது இந்த புகாரை உண்மை என்றே காட்டியது. கோலிக்கு பிறகு அணியில் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டு அவர் அணியில் முன்னிலை படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கான விளம்பர வீடியோவை ஐ.சி.சி வெளியிட்டது. அதில் இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், யுவேந்திர சாஹல் ஆகிய 4 வீரர்கள் மட்டுமே அதில் வரும் நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி இடம்பெறவில்லை.

இதைத் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து விராட் கோலி ஒதுக்கப்பட்டே வருவதாகவும், தற்போது ஐ.சி.சியும் அதே வேளையை செய்து வருவதாகவும் விராட் கோலியின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories