விளையாட்டு

’அவர் அப்படி செய்திருக்க கூடாது’.. சீனியர் வீரரை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி!

ஷோயப் மாலிக் அப்படியொரு ட்விட்டை பதிவிட்டிருக்கக்கூடாது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி விமர்சித்துள்ளார்.

’அவர் அப்படி செய்திருக்க கூடாது’.. சீனியர் வீரரை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகிஸ்தான் அணியில் நீண்ட காலமாக நிலவி வரும் மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு இந்த டி20 உலகக் கோப்பையில் சீனியர் வீரர் ஷோயப் மாலிக் இருந்திருப்பார் என்று கூறியிருக்கிறார். அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்திருக்கும் நிலையில், அதில் மாலிக் இடம்பெறவில்லை. அணி அறிவிப்புக்கு முன்பு மாலிக் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என்று பல பேச்சுகள் அடிபட்டன. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

மாலிக் கடைசியாக கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் தான் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். பாகிஸ்தான் மிடில் ஆர்டரில் மாலிக்கின் முக்கியமான வீரர் என்பதால், அவர் அணியில் இல்லாததை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

’அவர் அப்படி செய்திருக்க கூடாது’.. சீனியர் வீரரை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி!

இது பயற்றிப் பேசிய அப்ரிடி, "அவர் உலகம் முழுவதும் பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் விளையாடியிருக்கிறார். எல்லா இடங்களிலும் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஒவ்வொரு டி20 அணிக்கும் அவர் டாப் சாய்ஸாக இருந்திருக்கிறார். மிகவும் மிகவும் ஃபிட்டாகவும் இருக்கிறார். மாலிக் இந்த அணியில் இருந்திருந்தால், அவர் பிளேயிங் லெவனில் இல்லாமல் இருந்திருந்தாலும் கூட பாபர் ஆசமுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்திருப்பார். தேர்வாளர்களின் திட்டத்தில் மாலிக் இல்லாதபட்சத்தில் அதை அவர்கள் சரியாக அவரிடம் சொல்லியிருக்கவேண்டும்" என்று கூறியிருக்கிறார் அப்ரிடி.

ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்ற பிறகு மாலிக் ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார். அதில், "நாம் எப்போது நட்பை, நமக்குப் பிடித்தவர், பிடிக்காதவர் என்பதையெல்லாம் கடந்து வரப் போகிறோம். அல்லா எப்போதும் நேர்மையானவர்களைக் காப்பாற்றுவார்" என்று பதிவிட்டிருந்தார் அவர். அந்த டிவீட்டைப் பற்றியும் குறிப்பிட்டு பேசினார் அப்ரிடி.

’அவர் அப்படி செய்திருக்க கூடாது’.. சீனியர் வீரரை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி!

மாலிக் இந்த விஷயத்தைப் பற்றி பொதுவெளியில் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறிய அப்ரிடி, குறைந்தபட்சம் உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்படும் வரையிலாவது மாலிக் காத்திருந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார் அப்ரிடி. "என்னைப் பொறுத்தவரை மாலிக் அப்படியொரு டிவீட்டை பதிவிட்டிருக்கக்கூடாது. அவர் அணி அறிவிக்கப்படுவம் வரையில் காத்திருந்திருக்கவேண்டும். அவர் அணியில் ஒரு அங்கமாக இருந்திருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்" எனக் கூறினார் அப்ரிடி.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகக் கோப்பையில் இடம்பெற்றிருக்கும் வீரர்களில் ஃபகர் ஜமான், ஷஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் மட்டும் அந்த அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதில் நார்தனர்ஸ் அணியின் ஆல்ரவுண்டார் ஆமிர் ஜமால் மற்றும் சிந்தைத் சேர்ந்த மிஸ்டிரி ஸ்பின்னர் அப்ரார் அஹமது ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஷோயப் மாலிக்கை சேர்த்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார் அப்ரிடி.

"பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மாலிக்கை சேர்ந்திருக்கலாம். ஒரு மூன்று அல்லது நான்கு போட்டிகளுக்கு அவரை முயற்சி செய்து பார்த்திருக்கலாம். நம் அணிக்கு ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது. அந்த இடத்தில் ஷோயப் மாலிக்குக்கு நிறைய அனுபவம் இருக்கிறது" என்று கூறினார் அப்ரிடி.

’அவர் அப்படி செய்திருக்க கூடாது’.. சீனியர் வீரரை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி!

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி: பாபர் ஆசம் (கேப்டன்), சதாப் கான் (துணைக் கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்திகார் அஹமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், உஸ்மான் காதிர்.

ரிசர்வ்ஸ்: ஃபகர் ஜமான், முகமது ஹாரிஸ், ஷனாவாஸ் தஹானி

banner

Related Stories

Related Stories