விளையாட்டு

“வருத்தப்பட்டு டிரஸ்ஸிங் ரூமில் பேசாமல் இருந்தார்..” : ரோஹித் பற்றி மனம் திறந்த முன்னாள் பயிற்சியாளர்!

"ரோஹித் ஷ்ர்மா அவுட் ஆகி திரும்பியதும், டிரஸ்ஸிங் ரூமில் வெகுநேரம் பேசாமல் அமைதியாகவே உட்கார்ந்திருந்தார்.” ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

“வருத்தப்பட்டு டிரஸ்ஸிங் ரூமில் பேசாமல் இருந்தார்..”  : ரோஹித் பற்றி மனம் திறந்த முன்னாள் பயிற்சியாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரில் இந்திய அணியின் சிறந்த வீரராக ஜொலித்தது இப்போதைய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா.

தள்ளிவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் நடக்க, அதில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது இங்கிலாந்து. அந்தப் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் 368 ரன்கள் குவித்து இந்தியாவின் டாப் ஸ்கோரராக விளங்கினர் ரோஹித். முதல் நான்கு போட்டிகளில் 36, 83, 59, 127 என நல்ல ஸ்கோர்கள் அடித்தார் அவர்.

“வருத்தப்பட்டு டிரஸ்ஸிங் ரூமில் பேசாமல் இருந்தார்..”  : ரோஹித் பற்றி மனம் திறந்த முன்னாள் பயிற்சியாளர்!

ஓவல் மைதானத்தில் அவர் அடித்த சதம் தான் வெளிநாட்டு மண்ணில் அவர் அடித்த முதல் டெஸ்ட் சதம். அந்தத் தொடர் முழுவதுமே நன்றாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார் ரோஹித்.

அந்தத் தொடரின்போது ரோஹித் மிகவும் மனம் உடைந்து போயிருந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்திருக்கிறார் அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.

அந்தப் போட்டியில் 83 ரன்கள் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்தார் ரோஹித் ஷர்மா. அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார் அவர். அவுட்டாகி டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பி வெகுநேரம் வருத்தப்பட்டுக்கொண்டிருந்த ரோஹித் பற்றிக் கூறியிருக்கிறார் ரவி சாஸ்திரி.

“வருத்தப்பட்டு டிரஸ்ஸிங் ரூமில் பேசாமல் இருந்தார்..”  : ரோஹித் பற்றி மனம் திறந்த முன்னாள் பயிற்சியாளர்!

"ரோஹித் ஷ்ர்மா அவுட் ஆகி திரும்பியதும், டிரஸ்ஸிங் ரூமில் வெகுநேரம் பேசாமல் அமைதியாகவே உட்கார்ந்திருந்தார். அவர் பிரம்மித்துப்போய் உட்கார்ந்திருந்தார். அவர் அந்த சதத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார். லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பது எந்தவொரு வீரருக்குமே மிகப்பெரிய விஷயம். அதனால் அவர் மிகவும் மனமுடைந்திருந்தார். ஆனால், அதை ஈடுகட்டும் வகையில் ஓவல் மைதானத்தில் சதம் அடித்துவிட்டார்" என்று இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டவது ஒருநாள் போட்டியின்போது கூறினார் ரவி சாஸ்திரி.

ரவி சாஸ்திரி சொன்னதுபோல், லார்ட்ஸ் மைதானத்தில் சதத்தை தவறவிட்டதற்கு ஓவல் மைதானத்தில் சதமடித்து சரிசெய்துகொண்டார் ரோஹித் ஷர்மா. ஹெடிங்லி மைதானத்தில் நடந்த போட்டியில் கூட இரண்டாவது இன்னிங்ஸில் 59 ரன்கள் அடித்தார் அவர். அந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

ஓவல் மைதானத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களுக்கே அவுட் ஆகியிருந்தார் அவர். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக விளையாடினார். கே எல் ராகுல், ரோஹித் ஷர்மா இருவரும் இணைந்து புதிய பந்தை சிறப்பாக எதிர்கொண்டனர்.

முதல் விக்கெட்டுக்கு அந்தக் கூட்டணி 83 ரன்கள் எடுத்தது. அதன்பிறகும் மிகச் சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா, அந்த இன்னிங்ஸில் 127 ரன்கள் எடுத்தார் அவர். ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் அரைசதம் கடந்ததால், இங்கிலாந்து அணிக்கு ஒரு மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

banner

Related Stories

Related Stories