விளையாட்டு

கோலியின் கேப்டன்ஷிப்பை ஐ.பி.எல். போட்டியை வைத்து ஒப்பிடக்கூடாது - சவுரவ் கங்குலி கருத்து!

ஐ.பி.எல். போட்டியில் உள்ள கோலியின் கேப்டன்ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கோலியின் கேப்டன்ஷிப்பை ஐ.பி.எல். போட்டியை வைத்து ஒப்பிடக்கூடாது - சவுரவ் கங்குலி கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பு விராட் கோலியின் கேப்டன் ஷிப்பை முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் விமர்சனம் செய்திருந்தார்.இந்த முறையும் பெங்களூர் அணி சாதிக்க தவறியது. இந்த ஆண்டு பெங்களூர் அணி தகுதிச்சுற்றுடன் வெளியேறியது. ஐ.பி.எல்.லில் விராட்கோலியின் கேப்டன்ஷிப் உலக கோப்பை போட்டியிலும் எதிரொலிக்கும் என்ற கருத்து நிலவிவருகிறது.

கோலியின் கேப்டன்ஷிப்பை ஐ.பி.எல். போட்டியை வைத்து ஒப்பிடக்கூடாது - சவுரவ் கங்குலி கருத்து!

இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியில் உள்ள கோலியின் கேப்டன்ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ,

"விராட்கோலியின் ஐ.பி.எல். போட்டி கேப்டன் ஷிப்பை இந்திய அணி விளையாடும் போட்டிகளுடன் ஒப்பிடக்கூடாது. இந்திய அணிக்காக கோலியின் கேப்டன்ஷிப் மிக நன்றாக உள்ளது. ரோகித் சர்மா துணை கேப்டனாக உள்ளார். அணியில் டோனி இருக்கிறார். ஆகையால் அவர் நல்ல ஆதரவு பெற்று இருக்கிறார்.

உலக கோப்பை போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்களிப்பு அளிப்பார். அவர் அற்புதமான பார்மில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கான வாய்ப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்.உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறும்.

இந்திய அணி வலுவானதாக இருக்கிறது. உலக கோப்பை போட்டிகளில் விளையாடும் போது இந்தியா அணி எப்போதுமே வாய்ப்பில் இருக்கும். கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்திய அணி உள்ளதால் நெருக்கடி இருக்கும். ஆனால் அதுவே இந்திய வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்." இவ்வாறு அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories