விளையாட்டு

IPL 2019 : டெல்லியை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முன்னேறியது மும்பை அணி ! 

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2019 : டெல்லியை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முன்னேறியது மும்பை அணி ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் தொடரில் நேற்றிரவு டெல்லி பெரோஷ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதின.டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.மும்பை அணியில் ஜேசன் பெஹ்ராண்டர்ப், இஷான் கிஷன் நீக்கப்பட்டு பெண் கட்டிங்,ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டனர்.

IPL 2019 : டெல்லியை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முன்னேறியது மும்பை அணி ! 

அதன் படி முதலில் விளையாடிய மும்பை இன்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர். நிலைத்து விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 30 ரன்னில் அமித் மிஸ்ரா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய பென் கட்டிங் 2 ரன்னில் அக்சர் படேல் பந்தில் அவுட் ஆகினார்.

அதிரடியாக விளையாடிய ஹர்டிக் பாண்டியா 15 பந்தில் 32 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். மும்பை இன்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் அடித்தது. டெல்லி அணியில் ராபாடா 2, மிஸ்ரா 1, அக்ஷார் படேல் 1 விக்கெட்கள் வீழ்த்தினர்.

அதன் பின்னர் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா இருவரும் களம் இறங்கினர். அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 35 ரன்னில் ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் பிரித்வி ஷாவும் 20 ரன்னில் ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆகினார்.

IPL 2019 : டெல்லியை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முன்னேறியது மும்பை அணி ! 

அடுத்து வந்த காலின் முன்ரோ 3 ரன்னில் க்ருனால் பாண்டியா ஓவரில் அவுட் ஆக அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 3 ரன்னில் ராகுல் சஹாரிடம் அவுட் ஆக அடுத்து வந்த அதிரடி வீரர் ரிஷப் பன்ட் 7 ரன்னில் பும்ரா பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.

IPL 2019 : டெல்லியை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முன்னேறியது மும்பை அணி ! 

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.அதனையடுத்து, 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது.

மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஹர்டிக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் வெற்றி பெற்று மும்பை அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

banner

Related Stories

Related Stories