விளையாட்டு

IPL 2019 : கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து சென்னை அணி த்ரில் வெற்றி!

ஐ.பி.எல் தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றிரவு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

IPL 2019 : கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து சென்னை அணி த்ரில் வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஐ.பி.எல் தொடர் கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றிரவு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

ரஹானே, பட்லர் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினார்கள். சாஹர் வீசிய முதல் ஓவரில் பட்லர் சிக்ஸர், பவுண்டரியும், சான்ட்னர் வீசிய ஓவரில் ரஹானே 2 பவுண்டரிகள் விளாசினார். சாஹர் வீசிய பந்தில் எல்பிடபில்யு முறையில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சாம்ஸன் களமிறங்கினார்.

தாக்கூர் வீசிய 4-வது ஓவரில் பட்லர் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினர். ஆனால், அதே ஓவரின் 4-வது பந்தில் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து 23 ரன்களில் பட்லர் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஸ்மித்(15) திரிபாதி(10), சாம்ஸன்(6), ஸ்டோக்ஸ்(28), பராக்(16) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

சாஹர்  2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் கோபால் அதிரடியாக பேட் செய்தார். இதனால், அணியின் ஸ்கோர் 151 ரன்களைத் தொட்டது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 151 ரன்கள் சேர்த்தது. கோபால் 19 ரன்களிலும், ஆர்ச்சர் 13 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் ஜடேஜா, தாக்கூர், சாஹர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

குல்கர்னி வீசிய பந்தில்  வாட்ஸன் போல்டாகினார்
குல்கர்னி வீசிய பந்தில் வாட்ஸன் போல்டாகினார்

152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. குல்கர்னி வீசிய முதல் ஓவரிலேயே வாட்ஸன் போல்டாகி டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த ரெய்னா 2-வது ஓவரில் ஆர்ச்சரால் ரன் அவுட் செய்யப்பட்டு 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு வந்த ராயுடு, டூப்பிளசிஸுடன் இணைந்தார்.

உனத்கட் வீசிய 4-வது ஓவரில் டூ பிளசிஸ் தூக்கி அடித்த பந்தை திரிபாதி கேட்ச் பிடிக்க 7 ரன்னில் டூ பிளசிஸ் ஆட்டமிழந்தா். அடுத்து வந்த கேதார் ஜாதவ்,ஆர்ச்சர் வீசிய பந்தை ஜாதவ் அடிக்க அதை ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்தார்.இதனால், பவர்ப்ளேயில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

அடுத்து வந்த கேப்டன் தோனி களமிறங்கி, ராயுடுவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். கோபால் வீசிய 10-வது ஓவரில் தோனி இறங்கிவந்து சிக்ஸர் ஒன்றை அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். 41 பந்துகளில் ராயுடு அரைசதம் அடித்தார். கடைசி 3ஓவர்களில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். ராயுடு 57 ரன்கள் சேர்த்தநிலையில் கோபாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ஜடேஜா களமிறங்கி தோனியுடன் சேர்ந்தார்.கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரில் தோனி ஒரு பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்தார். இதனால், கடைசி 6 பந்துகளில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார்.

முதல் பந்தை ஜடேஜா ஆப்-சைடில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 2-வது பந்து நோபாலாக வீசப்பட்டதால், அதில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். ப்ரீஹிட்டாக வீசப்பட்ட அடுத்த பந்தில் தோனி 2 ரன்கள் சேர்த்தார். யார்கராக வீசப்பட்ட 3-வது பந்தில் தோனி க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து சான்ட்னர் களமிறங்கினார்.

4-வது பந்தை ஸ்டோக்ஸ் வீசினார். இந்த பந்து பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேல் சென்றது அதற்கு ஸ்டிரைட் அம்பயர் , நோ-பால் அளித்தார். ஆனால், லெக் அம்பயர் நோபாலை ரத்து செய்தார். இதில் 2 ரன்கள் மட்டுமே சான்ட்னர் எடுத்தார். ஆனால், இந்த இடுப்புக்கும் மேலே பந்துவீசப்பட்டும் நோபால் தராததால், மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, மைதானத்துக்குள் நடந்து வந்தார்.

நடுவர்களிடம்  வாதிட்ட தோனி
நடுவர்களிடம் வாதிட்ட தோனி

ஏன் நோ-பாலை ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களிடம் தோனி வாதிட்டார். உடன் பென் ஸ்டோக்ஸும் பேச, அந்த இடத்தில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், நடுவர்கள் நோ-பால் தர மறுத்துவிட்டதால், தோனி கோபத்துடன் வெளியேறினார்.

5-வது பந்திலும் சான்ட்னர் 2 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. கடைசிப்பந்தை ஸ்டோக்ஸ் வைடாக வீசியதால், ஒரு ரன் கிடைத்தது. மீண்டும் வீசப்பட்ட அந்த பந்தில் சான்ட்னர் ஆப்-சைடில் ஒரு சிக்ஸர் அடிக்க பரபரப்பான வெற்றியுடன் சிஎஸ்கே ஆட்டத்தை முடித்தது.

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த மிட்செல் சான்ட்னர் 
கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த மிட்செல் சான்ட்னர் 

ஜடேஜா 9 ரன்களிலும், சான்ட்னர் 10 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

banner

Related Stories

Related Stories