பொங்கல் 2024

பொங்கல் திருவிழா: 7670 பேருந்துகள்.. 4.44 லட்சம் பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் - அரசுக்கு குவியும் பாராட்டு

“பொங்கல் திருநாளினை முன்னிட்டு இதுவரை 7,670 பேருந்துகளில் 4.44 லட்சம் (4,44,860) பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்.” என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் திருவிழா: 7670 பேருந்துகள்.. 4.44 லட்சம் பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் - அரசுக்கு குவியும் பாராட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“பொங்கல் திருநாளினை முன்னிட்டு இதுவரை 7,670 பேருந்துகளில் 4.44 லட்சம் (4,44,860) பயணிகள் சொந்த ஊருக்கு பயணம். மேலும் 2.30 லட்சம் (2,30,514) பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.” என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (13/01/2024) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளில் 2,100 பேருந்துகளும் 2,210 சிறப்புப் பேருந்துகளும் ஆக கடந்த 12/01/2024 முதல் 13/01/2024 இரவு 24.00 மணி வரை 7,670 பேருந்துகளில் 4,44,860 பயணிகள் பயணித்துள்ளனர்.

மேலும், இதுவரை 2,30,514 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். நேற்றைய ஒரு நாளில் மட்டும் 2210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இது கடந்த மூன்று வருடங்களில் ஒரே நாளில் இயக்கப்பட்ட அதிகபட்ச சிறப்பு பேருந்துகளாகும். நேற்று சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்க நேரம் கூடுதல் ஆனது.

பொங்கல் திருவிழா: 7670 பேருந்துகள்.. 4.44 லட்சம் பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் - அரசுக்கு குவியும் பாராட்டு

சென்னை திருச்சி சாதாரண நாட்களில் 7 மணி நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகள் 11 மணி நேரம் எடுத்துக் கொண்டதாலும் மேலும் பேருந்துகளை சென்னைக்கு அடுத்த நடைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இது தவிர திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலம் விரிசல் கண்டதால் பேருந்துகள் மாற்று வழி பாதையில் இயங்கியதும் காலதாமதத்திற்கு காரணமானது.

இதனால் சென்னையிலிருந்து பயணிகளை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில் சற்று காலதாமதம் ஆனது. நேற்று கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து பயணிகளை முழுவதுமாக தங்கள் ஊர்களுக்கு அனுப்ப இன்று காலை ஐந்து மணி வரை ஆனது.” எனத் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories