பொங்கல் 2024

போகி பண்டிகை கொண்டாட்டம் : புகை மண்டலமானது சாலைகள் - சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு!

எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்று வாகன ஓட்டிகள்.

போகி பண்டிகை கொண்டாட்டம் : புகை மண்டலமானது சாலைகள் - சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் நியதி என்ற அடிப்படையில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகியன்று பயனற்ற பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.

குறிப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி தங்களின் வீட்டை சுத்தம் செய்து பயனற்ற பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் போகியை வரவேற்பார்கள். அப்படி தமிழகம் முழுவதும் இன்று அதிகாலையிலேயே மக்கள் தங்களின் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் போகியை வரவேற்றனர்.

இதில் சிலர் தங்களின் வீட்டில் உள்ள அதிகப்படியான பழைய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் எரிக்கின்றனர். இதனால் சென்னை போன்ற பெரு நகரங்கள் புகை மண்டலங்களாக காட்சியளிக்கின்றன.

போகி பண்டிகை கொண்டாட்டம் : புகை மண்டலமானது சாலைகள் - சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு!

முன்னதாக, பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டது. ஆனால் காலையில் இருந்தே சென்னையில் காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில், மணலி, அலந்தூர், வேளச்சேரி, கொடுங்கையூர், ராயபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மோசம் என்ற நிலையை எட்டியுள்ளது.

வடசென்னை பகுதியான திருவொற்றியூர், தண்டையார்பேட்டை எண்ணூர், மணலி, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டு முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டு வாகன ஓட்டிகள் கட்டும் சிரமம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக, காற்று மாசின் அளவும் 100 என்று இருக்க வேண்டிய நிலையில் பல்வேறு இடங்களில் விடியற்காலைகளையே 200 என்ற அதிகரித்து காணப்பட்டது குறிப்பாக துறைப்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, கத்திப்பாரா, அசோக் நகர், திருவல்லிக்கேணி, அடையாறு, எண்ணூர், போன்ற பகுதிகளில் விடியற்காலை 6 மணிக்கே காற்று மாசின் அளவு 230 தாண்டியது.

முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாமல் தங்களது வாகனத்தில் முகப்பு விளக்குகளை எரிய விட்டும் சாலையில் தெரியாமல் விபத்துக்கள் ஏற்படும் நிலையில் வாகனங்கள் செல்கின்றனர். அதிலும் வெறும் புகை மூட்டமாக காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதேபோல் புகைமூட்டம் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 50 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories