பொங்கல் 2024

போகி பண்டிகை: புகையால் சூழ்ந்த ஏர்போர்ட் ; சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு - பயணிகள் கடும் அவதி!

போகி பண்டிகையின் புகைமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

போகி பண்டிகை: புகையால் சூழ்ந்த ஏர்போர்ட் ;  சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு - பயணிகள் கடும் அவதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

போகி பண்டிகை என்பது பழைய டயர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவைகளை வீட்டின் முன்னால் தெருக்களில் போட்டு எரிப்பது வழக்கம். அதைப்போல் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள கவுல் பஜார், பம்மல், அனகாபுத்தூர், மீனம்பாக்கம், தரைப்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்து, குடியிருப்பு பகுதி மக்கள் உற்சாகமாக போகிப் பண்டிகையை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

அவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய கழிவுப் பொருட்கள் பிளாஸ்டிக் டயர்கள் போன்றவைகளை தெருக்களில் எரித்ததால், அதனால் ஏற்பட்ட புகை மூட்டங்கள், விமான நிலைய ஓடுபாதை மைதானங்களை மைதானத்தை சூழ்ந்து கொண்டது. அதோடு பனிமூட்டமும் சூழ்ந்து கொண்டதால், விமான நிலைய ஓடுபாதியே தெரியாத நிலை ஏற்பட்டது.

இதை அடுத்து அதிகாலை 4 35 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை ஐந்து நாற்பத்தைந்து மணிக்கு, 260 பயணிகளுடன் லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், ஆகிய இரண்டு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

போகி பண்டிகை: புகையால் சூழ்ந்த ஏர்போர்ட் ;  சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு - பயணிகள் கடும் அவதி!

மேலும் மும்பை டெல்லி மஸ்கட் உள்ளிட்ட பல்வேறு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டு இருக்கின்றன. அந்த விமானங்களும் பெங்களூர் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதைப்போல் சென்னையில் இருந்து அந்தமான் புனே மும்பை டெல்லி தூத்துக்குடி ஹைதராபாத் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் பனிமூட்டம் காரணமாக புறப்பட முடியாமல் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories