அரசியல்

தேவ - அசுர புராணக் கதையின் மூலம் பாரசீகமா ?அங்கிருந்து அடித்து விரட்டப்பட்ட தேவர்கள் உருவாக்கிய கதை என்ன?

பாரசீகத்து விவசாயிகளால் அடித்து விரட்டப்பட்ட இந்த தேவர்கள் காடு மலைகளை கடந்து ஓடிவந்து அடுத்து சேர்ந்த இடம் சிந்துவெளி.

தேவ - அசுர புராணக் கதையின் மூலம் பாரசீகமா ?அங்கிருந்து அடித்து விரட்டப்பட்ட தேவர்கள் உருவாக்கிய கதை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய வரலாறு என சொல்லப்படும் புராணங்கள் வேறு நாட்டு மூலத்தைக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?

இந்தியாவின் புழங்கப்படும் சில புராணங்களுக்கு மூலம் வேறு இடத்தில் அமைந்திருக்கின்றன.

முக்கியமாக தேவ - அசுர புராணக் கதை!

ஆரியர்கள் தங்களை தேவர்களின் வழிவந்தவர்கள் அதனால் தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். சிந்துவெளிமக்களை அசுரர் என்று குறிப்பிட்டார்கள். இந்தச் சண்டைகளின் நினைவுகள் தாம் ரிக்-வேதத்தில் தேவ-அசுர யுத்தம் என்று விவரிக்கப்படுகிறது.

கி.மு.2500களில் பாரசீகத்தின் பாலைவனத்தின் நடுவே, கிடைத்த செழிப்பான மண்ணில் ஒரு விவசாய சமூகம் உருவாகியிருந்தது. அந்த விளைச்சலையும், சேமிப்பையும் இரவு நேரங்களில் கொள்ளையடிக்க வந்த நாடோடிக் கூட்டங்களை எதிர்த்து அச்சமூகம் விரட்டிக் கொண்டிருந்தது. அந்த நாடோடிக்கூட்டத்திற்கு பாரசீக விவசாய சமூகம் இட்டபெயர் தேவா (Daevas) என்பதாகும். பாரசீக மொழியில் அதன் பொருள் ராட்சஷர் அல்லது திருடர். அங்கு தோன்றிய மதம் செளராஷ்ட்ரம், அதனை பார்ஸீ என்றும் குறிப்பிடுவார்கள். அந்த மதத்தின் வேதநூல் ஜெண்ட் அவெஸ்தா (Zend Avesta).

தேவ - அசுர புராணக் கதையின் மூலம் பாரசீகமா ?அங்கிருந்து அடித்து விரட்டப்பட்ட தேவர்கள் உருவாக்கிய கதை என்ன?

ரிக் வேதத்தில் உள்ள தேவ-அசுர யுத்தம் சிந்தனைகளுக்கு மூல காரணமானவை அவெஸ்தாவில் உள்ளன.

அவெஸ்தா ஒளிதரும் கடவுளான அஹூரா மஜ்தா-வை மையமாக கொண்ட மதம். ஒளி என்பது விவசாயிகளுக்கு பாதுகாப்பாகவும், இருட்டு என்பது அவர்களின் எதிரிகளான திருடர்களுக்கு சாதகமாகவும் இருந்துள்ளது. ஒளிதான் தங்களை காப்பதாக அவெஸ்தா மதம் நம்பியது. இருட்டை அறவே வெறுத்த பாரசீக குடிகள் இரவைப் படைத்தவனை அருவருப்புடன் அங்கிரா மைன்யூ (angra mainyu) என்றழைத்தனர்.

தேவர்களின் தலைவனை அந்திரா என்றழைத்னர். ஒளியினால் பாதுகாக்கப்படும் அஹூராக்களின் உடைமைகளை திருட வரும் எதிரிகள் அனைவரையும் தேவர்கள் என்றே குறிப்பிட ஆரம்பித்தனர்.

இந்த திருடர்களின் வாழ்விடம் தமது பூமிக்கு வடக்கே இருக்கிறது என்று அவெஸ்தா கூறுகிறது. இந்த விவசாயிகளுக்கு வழிகாட்டியாய் ஒருவன் வருகிறான். அவன் திருடுபவர்களைப் பிடித்து மரணதண்டனை கொடுக்கிறான் அவன் பெயர் யிம(yima). மத்திய ஆசியப் பகுதியில் வாழ்ந்த இந்த தேவர்களுக்கு, தென் திசையிலிருந்த இந்த பாரசீகத்து யிம அச்சத்தைக் கொடுத்தான். காலப்போக்கில் தென் திசையே யிம திசையாகிப்போய்விட்டது.

தேவ - அசுர புராணக் கதையின் மூலம் பாரசீகமா ?அங்கிருந்து அடித்து விரட்டப்பட்ட தேவர்கள் உருவாக்கிய கதை என்ன?

பாரசீகத்து விவசாயிகளால் அடித்து விரட்டப்பட்ட இந்த தேவர்கள் காடு மலைகளை கடந்து ஓடிவந்து அடுத்து சேர்ந்த இடம் சிந்துவெளி. இங்கே சிந்துவெளியில் புதுவிதமான அஹூரா (விவசாயி)க்களை காண நேர்ந்தது.

பாரசீகத்து அஹூரா, சிந்துவெளியில் அஸூரா ஆயிற்று.

பாரசீகர்களுக்கு 'ஸ'வை உச்சரிக்க வராது. அதனாலேயெ சிந்து என்பது ஹிந்த் ஆயிற்று. தேவர்களின் தலைவனான அந்திரா இந்திரனாகவும் யிம எமனாகவும் மாறிப்போனார்கள். பாரசீகத்தின் அஹூராக்கள் பலம் வாய்ந்த நிலையில் இருந்ததால் தேவர்களை அடித்துவிரட்டும் சக்தி பெற்றிருந்தார்கள். துச்சமாய் கொன்று போட்டார்கள். பைசாசங்கள் என்று இழித்துரைத்தார்கள். ஆனால் சிந்துவிலோ , வந்து சேர்ந்த தேவர்களின் பலம் கூடியிருந்தது. அதனால் வென்றவர்கள் தேவர்கள்-உயர்ந்தவர்கள் ஆனார்கள். அதேபோல் அசுரர் என்பவர் ஒளியின் பிள்ளைகள், நாகரீகம் மிக்கவர்கள் என்ற பொருளுக்குப் பதிலாக ராட்சஷர் என்ற தலைகீழான அர்த்தம் ஏற்பட்டு அதுவே இன்றும் நிலைத்து நீடித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories