அரசியல்

“இதுகூட தெரியாம இவர்லாம் எப்படி போலிஸ் அதிகாரியா இருந்தாரு?” : அண்ணாமலையை விளாசிய ஆர்.எஸ்.பாரதி MP!

“இது கூட புரியவில்லை என்றால் இவர் எப்படி போலிஸ் அதிகாரியாக இருந்தால் என்று தெரியவில்லை." என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி பதிலடி கொடுத்துள்ளார்.

“இதுகூட தெரியாம இவர்லாம் எப்படி போலிஸ் அதிகாரியா இருந்தாரு?” : அண்ணாமலையை விளாசிய ஆர்.எஸ்.பாரதி MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கும் வகையில் துபாய் எக்ஸ்போ-22ல் கலந்துகொண்டதை கொச்சைப்படுத்தி, உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும், இல்லையென்றால் நஷ்ட ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

அதுகுறித்துப் பேசிய அண்ணாமலை, “தி.மு.க திராணி இருந்தால் என்னைக் கைது செய்யுங்கள். நான் அடுத்த ஆறு மணி நேரம் பா.ஜ.க அலுவலகத்தில்தான் இருப்பேன்.” எனப் பேசினார்.

அண்ணாமலைக்கு பதிலளிக்கும் வகையில் இன்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி எம்.பி., “அரசியல் பக்குவமில்லாமல் பேசி வருகிறார் அண்ணாலை. பா.ஜ.க மாநிலத் தலைவரான அண்ணாமலை பொறுப்புடன் பேச வேண்டும்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாகப் பேசியதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினேன். இது கூட புரியவில்லை என்றால் இவர் எப்படி போலிஸ் அதிகாரியாக இருந்தால் என்று தெரியவில்லை.

எல்லா வழக்கிலும் கைது செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. புகார் அளித்தால் விசாரணைக்குப் பின்னர் தான் போலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள். இது தெரியாத அண்ணாமலை எப்படி போலிஸ் அதிகாரியாக இருந்தாரோ?

எனக்கும், வில்சனுக்கும் அறிவு இருக்கிறதா என்று கேட்கிறார் அண்ணாமலை. எங்களுக்கு அண்ணாமலை சான்றிதழ் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. யாருக்கு அறிவு இல்லை என்பது மக்களுக்குத் தெரியும்.

அண்ணாமலை சிறைக்குச் செல்ல வேண்டும் என முடிவெடுத்துவிட்டார். அநாவசியமாக யாரையும் நாங்கள் கைது செய்வதில்லை. அதற்குரிய சூழல் ஏற்படும்போது நிச்சயம் ஜெயிலுக்குப் போவார்.

அண்ணாமலை அவதூறு பரப்புவதுபோல் முதல்வரும், அவருடன் சென்றவர்களும் கோடி கோடியாகப் பணம் கொண்டு சென்றிருந்தால் ஒன்றிய அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியது தானே? தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கெல்லாம் அரசியல் புரியாது என நினைத்துக் கொண்டிருக்கிறாரா?” என சரமாரியாக பதிலடி கொடுத்தார்.

banner

Related Stories

Related Stories