அரசியல்

“ஒரு ஆட்சி மாற்றம் இருண்டிருந்த தமிழகத்திற்கு மிகச்சிறந்த விடியலை தந்திருக்கிறது”: ‘தினகரன்’ நாளேடு !

ஒரு ஆட்சி மாற்றம் இருண்டிருந்த தமிழகத்திற்கு மிகச்சிறந்த விடியலை தந்திருக்கிறது என தினகரன் நாளேடு தலையங்கம் வெளியிட்டுள்ளது.

“ஒரு ஆட்சி மாற்றம் இருண்டிருந்த தமிழகத்திற்கு மிகச்சிறந்த விடியலை தந்திருக்கிறது”: ‘தினகரன்’ நாளேடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் மற்ற மாநிலங்களிலும் பாராட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் அவர் கூறுவது, “என்னுடைய வேலை மக்களுக்கு பணியாற்றுவது, ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்ல.. ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வது தான் எனது கொள்கை...” என அழகாக தெளிவு படுத்தியிருக்கிறார். ஒரு ஆட்சி மாற்றம் இருண்டிருந்த தமிழகத்திற்கு மிகச்சிறந்த விடியலை தந்திருக்கிறது என தினகரன் நாளேடு 10.12.2021 தேதியிட்ட இதழில் “தமிழகத்திற்கு விடியல்” என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு :

மே 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அப்போது கொரோனா 2வது அலை தமிழகத்தில் தீவிரமாக இருந்தது. இதை கட்டுப்படுத்துவதையே முதல் பணியாக மேற்கொண்டிருந்தார். தேர்தல் அறிக்கையில் கூறியது போல, கொரோனா நிவாரணத்தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கினார். இரண்டாவது அலையின்போது வடமாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்க முடியாமல் அம்மாநில அரசுகள் திணறின. தமிழகத்தில் அப்படி ஒரு நிலைமை ஏற்படாமலிருக்க அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தினார். ‘‘வார் ரூம்’’ மூலம் பொதுமக்கள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை தெரிந்து கொள்ள வழிவகைகளை ஏற்படுத்தினார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், தடுப்பூசி போடுவது ஒரு மக்கள் இயக்கமாகவே மாறியது. வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி, குறைந்த நாட்களில் அதிகளவு தடுப்பூசி போட்ட மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக திகழ்ந்தது. ஒருபுறம் கொரோனா மிரட்டல் ஓய்ந்த நேரத்தில், மழை தன் வேலையை காட்டியது. 2015ல் ஏற்பட்டது போல, தலைநகர் சென்ைன தண்ணீரில் தத்தளித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டார். விரைந்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அரசின் வேகம் கலந்த விவேகமான நடவடிக்கைகளால் சென்னை விரைவிலேயே இயல்பு நிலைக்கு திரும்பியது.

அத்தோடு நில்லாமல் வெள்ளத்தால் விளைநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டார். பேரிடர் பணிகளுக்கு இடையிலும் மக்கள் நலத்திட்டங்களை அவர் விட்டு வைக்கவில்லை. ‘‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’’ என்ற அற்புத திட்டம் மூலம் தொழில்துறைக்கான முதலீடுகளை அதிகப்படுத்தினார். சுமார் 50 ஆயிரம் கோடிக்கு மேல் தொழில்துறையில் முதலீடுகளை ஈர்த்தார். இதன்மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில், தமிழ் மொழி பாடத்தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டது திமுக ஆட்சிக்கு மணி மகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது.

ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், நீதிபதி புகழேந்தி, ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு முடியுமோ, அதை விட அதிகமாக தற்போது பணியாற்றி வருகிறார்’’ என பாராட்டு தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் பாராட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் அவர் கூறுவது, ‘‘என்னுடையே வேலை மக்களுக்கு பணியாற்றுவது. ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்ல... ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வதுதான் எனது கொள்கை...’’ என அழகாக தெளிவுபடுத்தியிருக்கிறார். ஒரு ஆட்சி மாற்றம் இருண்டிருந்த தமிழகத்திற்கு மிகச்சிறந்த விடியலை தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

banner

Related Stories

Related Stories