அரசியல்

“காழ்ப்புணர்ச்சியால் பேசும் ராமதாஸுக்கு விளக்கமளிக்க வேண்டியதில்லை” - கனிமொழி எம்.பி பதிலடி!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ராமதாஸ் பேசி வருகிறார் என தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

“காழ்ப்புணர்ச்சியால் பேசும் ராமதாஸுக்கு விளக்கமளிக்க வேண்டியதில்லை” - கனிமொழி எம்.பி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு இன்று காலை தாயகம் திரும்பினார் தி.மு.க நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி.

சென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்கு தி.மு.க மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

“காழ்ப்புணர்ச்சியால் பேசும் ராமதாஸுக்கு விளக்கமளிக்க வேண்டியதில்லை” - கனிமொழி எம்.பி பதிலடி!

அதில், பெண்களை நாடாளுமன்ற அமைப்பிற்கு கொண்டு வருவது, சுகாதார பிரச்னைகள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ராஜீவ் காந்தி மரணம் குறித்து சீமான் பேசுவது அநாகரிகமான செயல் என கருத்து கூறினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆதாரமில்லாமல் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசி வருகிறார் என்றார்.

மேலும், “தலைவர் கலைஞரின் உழைப்பால் உருவானதுதான் முரசொலி அலுவலகம். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது போல ஆதாரமிருந்தால் நிரூபித்துவிட்டு ராமதாஸ் பேசட்டும்.

“காழ்ப்புணர்ச்சியால் பேசும் ராமதாஸுக்கு விளக்கமளிக்க வேண்டியதில்லை” - கனிமொழி எம்.பி பதிலடி!

முரசொலி எப்படி, எவ்வாறு உருவாக்கப்பட்டது என தலைவர் கலைஞரின் உழைப்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகையால் ராமதாஸ் பேச்சுக்கெல்லாம் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை” என கனிமொழி கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories