அரசியல்

‘பல்டி’யடித்த அமித்ஷா... தி.மு.க எதிர்ப்பால் ‘ஒரே மொழி இந்தி’ கோஷத்திலிருந்து பின்வாங்கிய பா.ஜ.க!

தமிழகத்தில் தி.மு.க-வின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ‘ஒரே மொழி - இந்தி’ எனும் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியிருக்கிறார் அமித்ஷா.

‘பல்டி’யடித்த அமித்ஷா... தி.மு.க எதிர்ப்பால் ‘ஒரே மொழி இந்தி’ கோஷத்திலிருந்து பின்வாங்கிய பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஒரே தேர்தல் எனத் தொடங்கி ஒரே கல்வி, ஒரே ரேஷன், ஒரே கட்சி என பா.ஜ.க தன்னுடைய அகண்ட பாரத திட்டத்தை நீட்டித்து வருகிறது. அதன் வரிசையில் சமீபத்தில் அனைவரையும் கொந்தளிக்கச் செய்தது பா.ஜ.க-வின் ஒரே மொழி எனும் முழக்கம்.

பா.ஜ.க-வின் தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா, “நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்திமொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி” எனக் கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமித்ஷாவின் கருத்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “அரசமைப்புச் சட்டத்தின்படி அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்படவேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியான இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் கண்டனத்திற்குரியதுமாகும்.” என அறிக்கை வெளியிட்டார்.

மேலும், “அமித்ஷா தனது கருத்தை மறுபரிசீலனை செய்வது, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உகந்ததாக இருக்கும். எனவே அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். பிரதமர் மோடி அவர்களும் இது குறித்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

இல்லையெனின், தி.மு.கழகம் இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும்” என வலியுறுத்தி இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20ம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

‘பல்டி’யடித்த அமித்ஷா... தி.மு.க எதிர்ப்பால் ‘ஒரே மொழி இந்தி’ கோஷத்திலிருந்து பின்வாங்கிய பா.ஜ.க!

இந்நிலையில், இன்று அமித்ஷா தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார். "எனது கருத்து தவறாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது. மாநில மொழிகளுக்குப் பிறகு இரண்டாவது மொழியாக இந்தியை கற்க வேண்டும் என்றே கூறினேன். நானும் இந்தி பேசாத மாநிலத்திலிருந்துதான் வருகிறேன். நான் இந்திய மொழிகளை வலிமைப்படுத்த வேண்டும் என்றுதான் கூறினேன்." என பல்டி அடித்துள்ளார் அமித்ஷா.

தமிழகத்தில் தி.மு.க-வின் கடுமையான எதிர்ப்பு மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாகவே, அமித்ஷா பின்வாங்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories