அரசியல்

காங்கிரசில் இணைந்தார் நடிகர் சத்ருகன் சின்ஹா 

நடிகரும்,பாட்னா சாகிப் தொகுதி எம்.பியுமான சத்ருகன் சின்ஹா,அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். பிரதமர் மோடிக்கு எதிராக அவ்வப்போது கடுமையான கருத்துக்களையும் வெளியிட்டு வந்தார்.

காங்கிரசில் இணைந்தார் நடிகர் சத்ருகன் சின்ஹா 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடிகரும்,பாட்னா சாகிப் தொகுதி எம்.பியுமான சத்ருகன் சின்ஹா,அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். பிரதமர் மோடிக்கு எதிராக அவ்வப்போது கடுமையான கருத்துக்களையும் வெளியிட்டு வந்த சத்ருகன் சின்கா, சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையப் போவதாக அறிவித்து இருந்தார். கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சத்ருகன் சின்கா சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில், அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த சத்ருகன் சின்கா, பாஜக ஒருவரின் கட்சி எனவும் விமர்சித்தார். சத்ருகன் சின்கா, பாட்னா சாகிப் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என தெரிகிறது. இந்த தொகுதியில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.

இது குறித்து கூறுகையில், 'நீண்டகாலம் பணியாற்றிவிட்டு பாஜகவில் இருந்து விலகுவது வலியை தருவதாகத்தான் இருந்தது. ஆனால் பிரபல தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அருண்சோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரை கட்சி நடத்திய விதம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. வாஜ்பாய் காலத்தில் கூட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்போது கட்சியில் ஜனநாயகம் உண்மையான உணர்வுடன் இருந்தது. ஆனால் இப்போது ஒரு நபர் ஆட்சி, இரு நபர் படை (பிரதமர் மோடி, அமித்ஷா) என்று தான் இருக்கிறது' என கூறியிருந்தார்.

banner

Related Stories

Related Stories