அரசியல்

நெட்பிளிக்ஸை எதிர்க்கும் பா.ஜ.க.வினர் ;காரணம் என்ன ?

நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் ஸ்டேன்ட் அப் காமெடி நிகழ்ச்சி ஒன்றில்,நரேந்திர மோடியை விமர்சித்து பேசியிருந்தனர்.இது பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

நெட்பிளிக்ஸை எதிர்க்கும் பா.ஜ.க.வினர் ;காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஹசன் மின்ஹஜ். ஸ்டேன்ட்அப் காமெடியனான அவர், நெட்பிளிக்ஸ் தளத்தில் "ஹசன் மின்ஹஜ் உடன் தேசப்பற்று சட்டம்"(Patriot Act with Hasan Minhaj) என்ற தலைப்பில் ஸ்டேன்ட் அப் காமெடி நிகழ்ச்சி செய்துவருகிறார்.

அந்த நிகழ்ச்சியில் உலக நாடுகளிலுள்ள தற்கால அரசியல் நிகழ்வுகளை விமர்சித்துவருகிறார். அவருடைய கடைசி நிகழ்ச்சியில் இந்திய அரசியல் குறித்து பேசியிருந்தார். மேலும், நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்வுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.மேலும், பல ஊழல்கள் குறித்தும் பேசியிருந்தார். ஹசன் மின்ஹஜின் நிகழ்ச்சிக்கு பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மின்ஹஜ் தொடர்ச்சியாக இந்து எதிர்ப்பு மனநிலையில் உள்ளார். இந்து எதிர்ப்பு, இந்தியா எதிர்ப்பு பிரச்சாரமாக உள்ளது என்றும் பா.ஜ.க.வினர் கொந்தளித்துள்ளனர்.

நெட்பிளிக்ஸ், இந்தியாவை அவமானப்படுத்தியுள்ளது என்று பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்துவருகின்றனர். மேலும் #BoycottNetflix என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட் ஆகிவருகிறது. ஹசன் மின்ஹஜை விமர்சனம் செய்த பலரும் ட்விட்டரில் அவர்களது பெயருக்கு முன்னே மோடியைப் போல சௌகிதார்(chowkidar) என்பதை அடைமொழியாக வைத்துள்ளனர்.

பாடகர் விஜய் தட்லானி, ‘இந்தியாவில் வாழ்பவர்களும் வாக்களிப்பவர்களும் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த பிரபலமான ஸ்டேன்ட் அப் காமெடியன் குணால் கன்ரா, ‘நெட்பிளிக்ஸ் இந்தியா, இந்த நிகழ்ச்சி உங்களுக்கு மிகப் பெரிய அளவில் வருவாயை ஈட்டித்தரும். மின்ஹஜ் நிகழ்ச்சி தைரியமாகவும் தெளிவாகவும் உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஜமால் கசோகியை சவுதி அரேபியா அரசு கொலை செய்த விவகாரத்தில், அந்த அரசை கடுமையாக விமர்சனம் செய்து நெட்பிளிக்ஸில் ஹசன் மின்ஹஜ் ஒரு நிகழ்ச்சி செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு, சவுதி அரேபியா அரசு நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பை குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories