முரசொலி தலையங்கம்

எடப்பாடி போட்ட ‘எம்டன்’ குண்டு - முரசொலி தலையங்கம்!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்பேத்கரைப் பற்றி மிகப்பெரிய பொய்யைப் பேசி இருக்கிறார். இதனை எந்த ஏடும் வெளியிடவில்லை. வெளியிடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டார்களா?

ஏற்கனவே அவர் ‘சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம்’ என்று பேசிப் புகழ் அடைந்திருக்கிறார். அதனைவிட மேலும் ஒரு கொடுமை நடக்காத ஒன்றை நடந்ததாகத் தனது பேச்சின் மூலம் எடப்பாடி வெளியிட்டு விட்டார்.

இந்நிலையில், பபாசியின் செயலைக் கண்டித்து தனக்கு வழங்கப்பட்ட தலைப்பின் கீழ் உரையாற்றாமல், அந்த மேடையிலேயே பபாசியின் செயலைக் கண்டித்தார்.

இதனையடுத்து ஜனவரி 18ம் தேதி டி.டி.நெக்ஸ்ட், ‘பபாசி சு.வெங்கடேசனை குறை சொல்கிற செய்தியை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் முதல்வர் எடப்பாடி போட்ட ‘எம்டன்’ குண்டு பற்றிய செய்தி எதுவும் அதில் காணவில்லை.

அதுமட்டுமின்றி எடப்பாடி கட்சியின் நிறுவனத் தலைவரே இப்படி எல்லாம் பேசியிருக்கிறார். அவர் நிறுவனத்தலைவர் காட்டிய வழியில் அவர் பேசி இருக்கிறார். அவர்கள் ‘அம்மா’ காட்டிய வழியில் எல்லா வகையான திறமைகளையும் காட்டி அதிலும் அம்மாவை விஞ்சக் கூடிய அளவுக்கு ஆட்சி செய்து வருகிறார்கள்.

இது ‘எடப்பாடி போட்ட எம்டன் குண்டு’ என்று தோழர் வெங்கடேசன் போல் உள்ளவர்கள் பயப்பட வேண்டாம். அவர்கள் இதைவிடவும் அதிகம் பேசக்கூடிய ஆட்களை வைத்து இருக்கிறார்கள். ஆகவே நாம் இந்த ஆட்சியைத் தூக்கியெறியும் விதத்தில் பணியாற்றுவதைத் தவிர இந்தப் பரமார்த்த குரு சீடர்களை வேறு என்ன செய்யமுடியும்? எடப்பாடி மற்றொரு குண்டு போடுவதற்குள் அவரை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

banner