மு.க.ஸ்டாலின்

“CAA, NRC, NPR க்கு எதிரான போராட்டம் என்பது இந்தியர்களைக் காக்கும் போர்” - மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!

“நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அ.தி.மு.க, வாக்களித்த மக்களிடம் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும்.” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

“CAA, NRC, NPR க்கு எதிரான போராட்டம் என்பது இந்தியர்களைக் காக்கும் போர்” - மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இந்திய அரசியலமைப்புக்கும், மதச்சார்பின்மைக்கும் விரோதமாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் ஆகிவற்றின் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ‘குடியுரிமை பாதுகாப்பு மாநாடு’ சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.

அப்போது பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்த இந்திய நாட்டில் அமைதியற்ற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. மக்கள் கொடுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தலைநகர் டெல்லியில் நடக்கும் வன்முறைகளைப் பார்த்தால் அங்கு யார் கையில் அதிகாரம் இருக்கிறது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. வன்முறையாளர்கள் கையில் தலைநகர் டெல்லி சிக்கியிருக்கிறதென்றால் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன செய்துகொண்டிருக்கிறார்?

தலைநகரிலேயே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறதென்றால், மற்ற மாநிலங்களில் என்ன நிலை வரும் என்பதைச் சிந்தித்துப் பார்த்தாக வேண்டும். 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். செய்தியாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு மனம் இல்லை என்பதை இந்தச் சம்பவங்கள் நமக்கு எடுத்துக் காட்டியிருக்கின்றன.

“CAA, NRC, NPR க்கு எதிரான போராட்டம் என்பது இந்தியர்களைக் காக்கும் போர்” - மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!
Admin

பல்வேறு கொள்கைகளைக் கொண்ட நாங்களெல்லாம் இங்கு கூடியிருப்பது பா.ஜ.க-வை எதிர்ப்பதற்காக என்று கருதத் தேவையில்லை. இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக. இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காக.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் எல்லாமே பிரச்னைகள்தாம். அரசியல் செய்வதற்கான ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், இது மக்களுக்கான பிரச்னை.

குடியுரிமை வழங்குவதற்காகத்தான் அரசு சட்டம் போடும். குடியுரிமையைப் பறிப்பதற்கு சட்டம் போடும் அரசு பா.ஜ.க அரசுதான். சிலர் விஷம பிரச்சாரம் மேற்கொள்வது போல CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் என்பது இஸ்லாமியர்களைக் காப்பதற்கான போர் அல்ல; இந்தியர்களைக் காக்கும் போர்.

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆரால் பாதிக்கப்படக்கூடியவர்களை இஸ்லாமியர்கள், இந்துக்கள் எனப் பிரிப்பது தவறு. பாதிக்கப்படக்கூடியவர்கள் இந்தியர்கள். அஸ்ஸாமில் 19 லட்சம் பேர் குடியுரிமையை இழந்திருக்கிறார்கள் என்றால் அவர்களில் 6 லட்சம் பேர் இஸ்லாமியர்கள்; 13 லட்சம் பேர் இந்துக்கள்.

அப்படியானால், இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காக அவதாரம் எடுத்ததாக நடிப்பவர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்? நம்மை இந்துக்களின் எதிரிகளாகக் காட்டுவதற்கு ஒரு கூட்டம் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்துத்வத்தை எதிர்க்கிறோமே தவிர, இந்து மத நம்பிக்கை கொண்ட மக்களை அல்ல.

“CAA, NRC, NPR க்கு எதிரான போராட்டம் என்பது இந்தியர்களைக் காக்கும் போர்” - மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!
Admin

அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டும். நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அ.தி.மு.க, வாக்களித்த மக்களிடம் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும்.

ஆனால், எடப்பாடி இதைச் செய்யமாட்டார். செய்தால் சிறைக்குச் செல்லவேண்டும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்ள மக்களை பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு.

மனித மனங்களை பிளவுபடுத்துவதை விடுத்து மாற்று வழியை யோசியுங்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற்று இந்தியாவை அமைதி சூழ்ந்த நாடாக்குங்கள். மக்கள் விரும்பும் அமைதியான நிம்மதியான வாழ்வைத் தரவேண்டும் என தி.மு.க சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories