மு.க.ஸ்டாலின்

வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க முறைகேடு: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை !

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அ.தி.மு.கவினர் முறைகேட்டில் ஈடுபடுவது குறித்து மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முறையிட்டார்.

வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க முறைகேடு: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று தமிழகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது ஆளுங்கட்சியினர் பல்வேறு அத்துமீறல்களிலும், முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க முறைகேடு: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை !

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ” சேலம் கொளத்தூர் தொகுதியில் தி.முக வேட்பாளர் 800 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால் அதனை இன்னும் அறிவிக்காமல் உள்ளனர்.், தி.மு..கவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் அ.தி.மு.கவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்தின் எடப்பாடி தொகுதியில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டிய நிலையில், இதுவரையில் அறிவிக்காமல் உள்ள செய்தி வெளிவந்துள்ளது.

குறிப்பாக சேலம் மாவட்டம் கொளத்தூரில் தி.மு.க வேட்பாளர் 800 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால் அதனை இன்னும் அறிவிக்காமல் உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க முறைகேடு: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை !

அதே மாவட்டத்தைச் சேர்ந்த சில அ.தி.மு.கவினரின் வெற்றியை அறிவித்துவிட்டு, பின்னரே தி.மு.க உள்ளிட்ட பிற கட்சிகளின் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை அறிவிப்போம் என ஆட்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

கொங்கனாபுரம், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் திமுக வெற்றி பெற்றும், முன்னணியில் இருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. ஆனால் அதையும் இன்னும் அறிவிக்கவில்லை.

இதுமட்டுமல்லாமல் முதலமைச்சரின் மைத்துனரான வெங்கேடன் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்துகொண்டு அதிகாரிகளை வழிநடத்தி வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், திண்டுக்கல் வத்தலகுண்டு ஒன்றியத்தில் தி.மு.க வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் 112 வாக்கு வித்தியாசத்திலும், மீஞ்சூர் ஒன்றியத்தில் 176 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதனையும் இதுவரை அறிவிக்கவில்லை.

துணை முதலமைச்சர் ஓ.பி.எஸின் சொந்த மாவட்டமான தேனியில், போடி ஒன்றியத்திலும் தி.மு.க முன்னிலை வகித்து வருகிறது. தூத்துக்குடி பூதலூர் ஒன்றியத்தில் தி.மு.க ஏஜென்டுகள் மீது அராஜகத்தை கடைபிடித்து அவர்களை விரட்டியடித்துவிட்டு அ.தி.மு.கவினரை மட்டுமே அனுமதித்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க முறைகேடு: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை !

விளாத்திக்குளத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 3 வாக்கு பெட்டிகள் காணாமல் போயுள்ளது. வந்தாவாசி கீழ்புளவேடு ஊராட்சி ஒன்றியத்திலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

இது போன்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பல்வேறு பகுதிகளில் முன்னிலை வகிப்பதால், வெற்றியைத் தடுப்பதற்காக ஆளும் அ.தி.மு.க அரசு தொடர்ந்து முறைகேடுகளிலும், அத்துமீறல்களிலும் ஈடுபட்டுள்ளது.

ஆளுங்கட்சியின் இந்த அராஜகப்போக்குகளை எல்லாம் கண்காணித்து தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து தி.மு.கவினர் புகார் அளித்து முறையிட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஆகையால் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிப்பதற்காக மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்துக்கு பொருளாளர், முதன்மை செயலாளர் ஆகியோருடன் நேரடியாக வந்து முறையிட்டுள்ளோம்.

புகாரளித்தவுடனே சம்மந்தபட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கச்சொல்லி அறிவுறுத்தினார் பழனிசாமி. அரைமணி நேரத்திற்குள் அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கிறோம் என அவர் உறுதியளித்துள்ளார்.

ஆனாலும், அ.தி.மு.கவினரின் இந்த அத்துமீறல்களை புகார் தெரிவிப்பதோடு மட்டும் இருந்துவிடாமல் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடரவும் தி.மு.க முடிவெடுத்துள்ளது. அதன் பிறகும் தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு உண்ணாவிரதமோ அல்லது மாநிலம் தழுவிய போராட்டத்திலோ ஈடுபடுவதா என பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

banner

Related Stories

Related Stories