இலக்கியம்

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் 3 நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றும் ஆ.ராசா எம்.பி!

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா டிச.,4ஆம் தேதி மாலை சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் நடைபெறவுள்ளது.

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் 3 நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றும் ஆ.ராசா எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா டிச.,4ஆம் தேதி மாலை சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் நடைபெறவிருக்கிறது.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதிய ‘இடதுசாரித் தமிழ்த் தேசியம்’, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் எழுதிய ‘திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்’, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘மார்க்சியமும் பெரியாரும்’ ஆகிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு கருஞ்சட்டைப் பதிப்பக இயக்குநர் பெல்.ராஜன் தலைமை வகிக்க, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் முன்னிலை வகிக்கிறார்.

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் 3 நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றும் ஆ.ராசா எம்.பி!

தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா 3 நூல்களையும் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.

மாநிலக் கொள்கை வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவரும், பேராசிரியருமான ஜெ.ஜெயரஞ்சன் நூல்களைப் பெற்றுக் கொள்கிறார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஏற்புரை நிகழ்த்தவிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories