" பாரதியாரும் பாறுக் கழுகும்"
வானில் பறக்கும் புள்ளெல்லாம் நான்..
விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியினைப் போலே..
காக்கை குருவி எங்கள் சாதி..
என்று பாடி மகிழ்ந்து களிப்புற்று பறவைகளைத் தனது உறவினராகவும் தனதுயிராகவும் பார்த்தக் கவிஞன் பாரதியாரை நினைவு கூறும் முகமாகவும் பன்னாட்டுப் பாறுக் கழுகு நாளை முன்னிட்டும் (international Vulture Awareness Day) பாறுக் கழுகும் பாரதியாரும் என்ற நிகழ்வு நடைபெற உள்ளது.
பாறுக் கழுகு தனது கதையைச் சொல்வது போல வடிவமைத்த ஒலிப்பேழையை உதக மண்டலம் அரசு அருங்காட்சியகத்தில் அருளகம் சார்பாக நிறுவப்பட்டுள்ளது.
இந்த ஒலிப்பேழை தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. இதனை வரும் 11-09-2021 அன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா திறந்து வைக்க உள்ளார்.
அத்துடன் ஊணுண்ணிகளால் இறக்க நேரிட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.