இலக்கியம்

கவிஞர் கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம் ஆகியோருக்கு ‘விளக்கு இலக்கிய விருதுகள்’ அறிவிப்பு!

கவிஞர் கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம் ஆகிய இருவருக்கும் 2019ம் ஆண்டுக்கான விளக்கு இலக்கிய அமைப்பின் ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அமெரிக்கத் தமிழர்கள் நடத்தும் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24வது (2019) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கவிஞர் கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம் ஆகிய இருவரும் 2019ம் ஆண்டுக்கான விளக்கு இலக்கிய அமைப்பின் ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் ரூபாய் 1,00,000 மதிப்புள்ள விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2019 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்துள்ளது.

விருதுபெறும் கவிஞர் கலாப்ரியா, 1968 இல் கவிதைகள் எழுதத் தொடங்கியவர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக 24 கவிதைத் தொகுதிகள், (மூன்று மொத்தக் கவிதைகள் –காவ்யா 1994. தமிழினி 2000, சந்தியா பதிப்பகம் 2010 நீங்கலாக) இலக்கியக் கட்டுரைகள் 4, தன் வரலாற்றுப் புனைவு 5, தமிழ்சினிமா வரலாறு 3 என 12 உரைநடை நூல்கள், மூன்று நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு என மொத்தம் 40 நூல்கள் எழுதி இருக்கிறார்.

விருதுபெறும் பேராசிரியர் க. பஞ்சாங்கம், தமிழ்த் திறனாய்வு உலகில் ஒரு புதிய கோணத்தில், புதிய பகுதியில் தனது ஆய்வுகளை நகர்த்தியவர். இவர் கவிதை, நாவல், திறனாய்வு, பெண்ணியம், தலித்தியம் முதலிய சமூக அரசியல் மற்றும் கலையிலக்கியக் கோட்பாடுகள் சார்ந்த ஆய்வு, கோட்பாட்டு மூல நூல்களின் மொழிபெயர்ப்பு என்று பன்முக ஆளுமையாக வளர்ந்தார். சுமார் 40க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான காத்திரமான நூல்களை எழுதியுள்ளார்.

banner

Related Stories

Related Stories