இலக்கியம்

‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ : சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது!

மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழி பெயர்த்ததற்காக மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ : சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

சாகித்ய அகாடமி விருது சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.

பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பல்வேறு பிரிவுகளில் எழுத்தாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழி பெயர்த்ததற்காக மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மனோஜ் குரூரின் நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருது ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் இந்நாவல் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ : சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது!

இந்த நாவலில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க கால வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளதற்காகவும், தமிழ் மொழியில் உயர்ந்தமுறையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கே.வி.ஜெயஸ்ரீ கூறும்போது, ‘20 ஆண்டுகளாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை மொழிபெயர்க்குமாறு எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைத்தார். சங்க கால தமிழ் இலக்கியம் குறித்து மலையாள எழுத்தாளர் எழுதியிருந்தது வியப்பளித்தது. மொழிபெயர்புக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. ” என்று தெரிவித்துள்ளார்.

பிரபல எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், வம்சி பதிப்பகத்தின் இயக்குநருமான கே.வி.ஷைலஜாவின் சகோதரிதான் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories