இலக்கியம்

தன் நலம் இல்லாமல் சமூக மாற்றத்திற்காக உழைக்கும் பெண்களின் கதை - #iamthechange !

தன் நலம் இல்லாமல் சமூக மாற்றத்திற்காக உழைக்கும் பெண்களின் கதை -  #iamthechange !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தனி மனிதனின் மாற்றத்திலிருந்தே சமூக மாற்றம் தொடங்குகிறது. அப்படி அனைவருக்கும் உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை பெண்களின் கதைகளை #iamthechange என்ற பெயரில் பிபிசி தமிழ் தொகுத்து வெளியிட்டு வருகிறது.

பழங்குடி மாணவர்களின் வாழ்வை மாற்றும் ஆசிரியையின் கதை:

கல்வியே வேண்டாம் என ஒதுங்கி இருந்த பழங்குடி குழந்தைகளை படிப்பின் பக்கம் திருப்பியவர் ஆசிரியை மகாலட்சுமி. பழங்குடியினருக்காக அரசு நடத்தும் பள்ளியில் மாணவர்களே இல்லாத நிலையை மாற்றி, 400க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்திருக்கிறார்

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தனியாளாய் போராடும் பெண்ணின் கதை:

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களால் ஏற்படும் உபாதைகளை அறிந்த பிறகு, அவற்றை தவிர்த்து துணிகளால் செய்யப்பட்ட நாப்கின்களை செய்யத் தொடங்கினார் பானு. மேலும், அதை தயாரிக்கும் முறையையும் கிராமப்புற பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கும் கற்றுத்தருகிறார் பானுசித்ரா.

பூம்பூம் மாட்டுக்கார சமூகத்திற்காக பள்ளி நடத்துபவரின் கதை:

பத்திரிக்கை துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ரேவதி, பின்னர் திரைத்துறைக்குச் சென்றிருக்கிறார். பலாரின் வாழ்வை புரட்டிப் போட்ட சுனாமிதான் ரேவதியின் வாழ்வையும் புரட்டிப்போட்டுள்ளது.

சுனாமிக்குப் பிறகு நாகப்பட்டினத்திற்கு ஒரு தன்னார்வலராகச் சென்றவருக்கு அங்கு நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியைத் தந்திருக்கின்றன. அதன் பின்னர், ஆதியன் சமூக குழந்தைகளுக்காக அதாவது பூம் பூம் மாட்டுக்கார சமூக குழந்தைகளுக்காக வானவில் என்ற பள்ளியை தொடங்கி நடத்தி வருகிறார்.

ஆதரவற்ற விலங்குகளை அன்போடு பாதுகாக்கும் பெண்ணின் கதை:

விலங்குகளின் பாதுகாப்பிற்காகவும், ஆதரவில்லாமல் தெருக்களில் வாழும் நாய் மற்றும் பூனைகளுக்காகவும் 'ஹ்யூமன் அனிமல் சொசைட்டி' எனும் அமைப்பினை உருவாக்கி நடத்தி வருகிறார் மினி வாசுதேவன்.

இங்கு, உடல் நலமின்றி ஆதரவில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியும் நாட்டு நாய்களுக்கும் பூனைகளுக்கும் முறையான மருத்துவ சிகிச்சையும் பராமரிப்பும் அளிக்கப்படுகிறது.

திருநங்கைகளின் கல்விக்காக போராடும் பெண்ணின் கதை:

மதுரையில், திருநங்கைகள் ஆவணக் காப்பகம் என்ற ஒரு காப்பகம் மற்றும் நூலகத்தை நிர்வகித்து வருகிறார் ப்ரியா பாபு. திருநங்கை அல்லது திருநம்பிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சுகாதாரத்திற்கு வழிகாட்டுகிறது இவரின் ஆவண மையம்.

இப்படியாக சமூக மாற்றத்திற்காக, தங்களின் நலன் சாராமல் உழைத்துவரும் பெண்களை வாரம் தோறும் தமிழ்ச் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தி வருகிறது பிபிசி தமிழ்.

banner

Related Stories

Related Stories