ஓவியத்தில் சிறந்து விளங்கும் குங்கும திவ்யா, கரூரை சொந்த ஊராகக் கொண்டவர்.
இளங்கலை பொருளாதாரம் படித்த குங்கும திவ்யா, இயல்பிலேயே ஓவியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் அதையே தனது களமாகத் தேர்ந்தெடுத்தார்.
கலையார்வம் மிக்க குடும்பத்தினரின் ஆதரவோடு தனது ஓவியங்களை வெளிப்படுத்தத் துவங்கினார்.
குங்கும திவ்யா ஓவியப் பயிற்சியை யாரிடமும் பெறவில்லை. தனது சுய ஆர்வத்தாலேயே ஓவியங்களை வரைவதால், ஓவியங்களில் கட்டுப்பாடுகள் வைத்துக்கொள்வதில்லை.
எப்போதும், எந்த நேரத்தில் ஓவியம் வரையும் எண்ணம் வந்தாலும் வரைந்துவிடுவேன் எனச் சொல்கிறார் குங்கும திவ்யா.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தான் வரைந்த ஓவியங்களைப் பகிர, அவை மூத்த ஓவியர்களால் பாராட்டப்பட்டுள்ளன. அதுவே ஓவியங்களை காட்சிப்படுத்தவும், வணிகரீதியாக செயல்படவும் ஊக்குவித்துள்ளது.
விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் இயல்பிலேயே பறவைகள், இயற்கை, வயல்வெளிகள் ஆகியவற்றை கலைப்படைப்புகளாக்குவதில் இவருக்கு ஆர்வம் மிகுதி. மேலும், பெண் குறித்த ஓவியங்களை வரைவதிலும் விருப்பம் அதிகம்.
பென்சில் ஸ்கெட்ச், வாட்டர் கலர், அக்ரிலிக் வண்ண ஓவியங்கள் என பல ஓவிய நுட்பங்களையும் கையாண்டுள்ளார் குங்கும திவ்யா.
அக்ரிலிக் ஓவியத்தில், வண்ணக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதால், அதைச் செய்வதில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன் என்கிறார் குங்கும் திவ்யா.
குங்கும திவ்யாவின் கலைப் பயணத்தில் விஸ்காம் பட்டதாரியான அவரது சகோதரர் பெரிதும் உதவுகிறாராம்.
கிராமங்களின் கதைகளை ஓவியமாகக் காட்சிப்படுத்தும் குங்கும திவ்யாவுக்கு சொந்தமாக, ஒரு ஆர்ட் ஸ்டூடியோவை உருவாக்கவேண்டும் என்பதுதான் கனவாம்.
குங்கும திவ்யாவின் ஓவியங்கள் தற்போது மைலாப்பூரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ‘soul Art Gallery'-ல் வரும் அக்டோபர் 18ம் தேதி வரை இவரது ஓவியங்களைப் பார்வையிடலாம்.
தொடர்புக்கு : குங்கும திவ்யா - 99439 36994, 79044 15100