மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஆர்.ஜி.கர் என்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த 31 வயது முதுநிலை மருத்துவ மாணவி கடந்த ஆக.8-ம் தேதி இரவு நேரப்பணிக்கு சென்றுள்ளார். அப்போது இரவு சாப்பாடு சாப்பிட்ட பின்னர், சுமார் அதிகாலை 2 மணியளவில் தனக்கு அதிகமாக தூக்கம் வருவதாக கூறி அருகில் இருக்கும் வளாகத்திற்கு தூங்க சென்றார் அந்த மாணவி.
இந்த சூழலில் காலை நேரத்தில் வகுப்பறைக்கு வந்த மாணவர்கள், அந்த பெண் உடலில் ஆடைகளின்றி உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தற்கொலை செய்துகொண்டதாகவும் மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் அவரது கண்கள், வாய்களில் இருந்து இரத்தம் கசிந்துள்ளது. தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் முறையிட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், சிபிஐ-க்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டது.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து அதே மருத்துவமனையில் சமூக ஆர்வலராக இருந்த சஞ்சய் ராய் என்பவர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து மாணவியின் உடல்கூறாய்வில் மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது மாணவியின் உடலில் இருந்து 150 மில்லிகிராம் விந்துக்கள் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் அந்த பெண் மருத்துவர் பலரால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
மேலும் அந்த பெண்ணை வன்கொடுமை செய்வதற்கு முன்பாக அவரது கண்ணாடி உடைக்கப்பட்டு, கண்களின் குத்தியதால் கண்களில் இருந்து இரத்தம் கசிந்துள்ளது. மேலும் காதில் பலமாக அடித்ததால், காதுகளில் இருந்தும், தலையின் பின்புறம் தாக்கியதால் தலையிலும் கடுமையாக இரத்தம் கசிந்துள்ளது. அதோடு அந்த பெண்ணின் கால்கள் 90 டிகிரி செல்லும் அளவுக்கு உடைக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூரத்தின் உச்சத்தில் அந்த பெண் கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். இதெல்லாம் நடக்கும்போது அந்த பெண் சத்தம் போடக்கூடாது என்பதால் அவரது வாய் கிழிக்கப்பட்டு, தொண்டை உடைக்கப்பட்டு, கழுத்தில் உள்ள தைராய்டு கேலண்டும் உடைக்கப்பட்டுள்ளது.
வெறும் 2 மணி நேரம் இடைவெளிக்குள் அந்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தலை மற்றும் கால் உடைக்கப்பட்டபோது அந்த பெண் மருத்துவர் இறந்ததாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் அந்த பெண் மருத்துவர் பலராலும் பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. தொடர்ந்து 1 வார காலமாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் உடற்கூறாய்வு முடிந்து இன்று அந்த பெண் மருத்துவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரை காப்பாற்றும் மருத்துவர்களுக்கே இந்த நிலையா என்று மருத்துவர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கு வரும் ஆக.20-ம் தேதி (நாளை மறுநாள்) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கவுள்ளது.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி சஞ்சய் ராய் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் நாட்டையே உலுக்கிய நிலையில், பலரும் இதற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். நிர்பயா, ஹத்ராஸ் பெண் வன்கொடுமை, ஆசிஃபா உள்ளிட்ட கொடூர வன்கொடுமை பட்டியலில் தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது.
இதுபோன்ற நிகழ்வுக்கு பலரும் கண்டன குரல்களை எழுப்பி வந்தாலும், சில கொடூர காரர்கள் திருந்துவது போல் இல்லை. இதுபோல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு கொடூரமான முறையில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.