தனியார் இணைய ஊடகம் சார்பில் நேற்று 'ABP Rising Summit 2023' சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பி.டி.ஆர்., காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம், பி.ஆர்.எஸ். நிர்வாகி கவிதா, பாஜக தலைவர் அண்ணாமலை தெலங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் நடிகர்கள் சுஹாசினி, ரேவதி, ராணா டகுபதி, தீபிகா வெங்கடாசலம் உள்ளிட்ட திரைபிரபலங்களுக்கும் கலந்துகொண்டனர். தொடர்ந்து இதில் கலந்துகொண்ட விருந்தினர்கள் அரசியல் குறித்தும், அனுபவங்கள் குறித்தும் பேசினர். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் நிறைவாக '2024 நாடாளுமன்ற தேர்தலில் உள்ள வாய்ப்புகள், எதிர்க்கட்சிகளால் பாஜகவை வீழ்த்த முடியுமா' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில், பிஆர்எஸ் எம்எல்சி கல்வகுந்த்லா கவிதா, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் முன்னாள் எம்.பியுமான கல்வகுந்த்லா கவிதா (Kalvakuntla Kavitha), தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சரமாரி கேள்விகளை கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கவிதா பேசியதாவது, "பாஜக இப்போதும் பதில் கூறும்போது எதிர்க்கட்சியாக தான் இருக்கிறது. யாரேனும் அவர்கள் பிரச்னையை உங்களிடம் கூறினால், அதற்கு தீர்வு கூற மாறுகிறது. ஒரு உண்மையை கூற வேண்டுமென்றால், மோடி ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில், 10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ், தெலுங்கானாவில் எந்த ஒரு சிறப்பு திட்டமும் மோடி அறிவித்தது போல், செயல்படுத்தவில்லை.
ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள்.. நாங்கள் ஊழல்வாதிகள் என்று. எனது தலைவரும், தந்தையுமான சந்திரசேகர் ராவ், எனது மாநிலமான தெலங்கானாவுக்கு செய்த நல்ல திட்டங்களை, பாஜக ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் 100 ஜனமானாலும் செய்யமுடியாது. நாங்கள் மக்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவுமிருப்பதால் தான் 2 முறை தொடர்ந்து எங்களை தேர்ந்தெடுத்தார்கள்.
கார்ப்பரேட்டின் கடனை தள்ளுபடி செய்யும் நீங்கள், ஏன் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாவில்லை?. இப்போது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தலைவராக இருப்பவர், ஒரு கட்சியின் தலைவரின் மகன்; நீங்கள் குடும்ப அரசியலை பற்றி பேசுகிறீர்களா ? மத்திய பிரதேசத்தின் சிந்தியாவை (முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்) உங்கள் பக்கம் இழுத்து கொண்டு அங்கே ஆட்சியை கலைத்தீர்கள்.
திமுகவுடன் சில வருடங்கள் முன் கூட்டணி வைத்தீர்கள், அப்போது உங்களுக்கு தெரியவில்லையா? நீங்கள் உத்தவ் தாக்கரேவுடன் கூட்டணி வைத்தீர்கள், அப்போது உங்களுக்கு தெரியவில்லையா குடும்ப அரசியல் என்று. இவ்வளவு ஏன், ஆந்திர பிரதேசத்தின் பாஜக தலைவர், என்.டி.ராமாராவின் மகள். உங்களுக்கு அப்போதும் தெரியவில்லையா?
உங்களுக்கு ஏதாவாக இருந்தால் நீங்கள் குடும்ப அரசியலை பற்றி உங்களுக்கு ஏற்றார் போல் வளைத்து பேசுகிறீர்கள். இது நன்றாக இல்லை. ஒரு விஷயத்தை பற்றி பேசினால் நியாயமாக பேசுங்கள். தென்னிந்தியாவில் பாஜகவுக்கு '0' சீட்தான் கிடைக்கும். அதற்காக நாங்கள் கடினமாக உழைப்போம்." என்றார்.