இந்தியா

'உங்களை தொலைத்து விடுவேன்'.. போலிஸாரை பகிரங்கமாக மிரட்டிய புதுச்சேரி பா.ஜ.க MLA!

உங்களை தொலைத்து விடுவேன் என போலிஸாரை புதுச்சேரி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பகிரங்கமாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'உங்களை தொலைத்து விடுவேன்'.. போலிஸாரை பகிரங்கமாக மிரட்டிய புதுச்சேரி பா.ஜ.க MLA!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி பா.ஜ.க-வினர் ஒற்றுமை ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்திற்கு பா.ஜ.கவினர் காமராஜர் சிலையிலிருந்து குபேர் சிலை வரை செல்ல காவல்துறை அனுமதி வாங்கியிருந்தனர்.

இந்த ஊர்வலம் காமராஜர் சிலையிலிருந்து துவங்கிய ஊர்வலத்தில் பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

'உங்களை தொலைத்து விடுவேன்'.. போலிஸாரை பகிரங்கமாக மிரட்டிய புதுச்சேரி பா.ஜ.க MLA!

ஆனால் போலிஸார் அனுமதி தொடுத்திருந்த குபேர் சிலை வரை செல்லாமல் திடீரென தடையை மீறி பாரதி பூங்கா நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிஸார் அவரை தடுத்து நிறுத்தனர். இதனால் பா.ஜ.க-வினருக்கும் போலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது, காலாப்பட்டு தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் வேண்டும் என்றே போலிஸாரிடம் தகராறு செய்தார். மேலும் போலிஸாரை தள்ளிவிட்டு தடுப்புகளை மீறி முன்னேறிச் சென்றனர். அப்போது போலிஸாரை பார்த்து 'உங்களை எல்லாம் தொலைத்து விடுவேன் ' என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இதைக்கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

'உங்களை தொலைத்து விடுவேன்'.. போலிஸாரை பகிரங்கமாக மிரட்டிய புதுச்சேரி பா.ஜ.க MLA!

இதைத் தொடர்ந்து போலிஸாரை பகிரங்கமாக மிரட்டிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories