இந்தியா

6 வயதில் காணாமல்போன சிறுமி..9 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு.. மும்பையில் நெகிழ்ச்சி சம்பவம் !

6 வயதில் காணாமல்போன சிறுமி 9 வருடம் 7 மாதங்களுக்கு பிறகு 16 வயது சிறுமியாக அவர் தாயிடம் சேர்ந்துள்ளது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 வயதில் காணாமல்போன சிறுமி..9 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு.. மும்பையில் நெகிழ்ச்சி சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மும்பையில் கடந்த 2013ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற 6 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் போலிஸில் புகார் அளித்தனர். அதன்படி போலிஸாரும் வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

சிறுமியின் புகைப்படங்களை பல்வேறு இடங்களில் ஒட்டியும், செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்ததும் கிடைக்காததால் போலிஸாரும் தேடுதலை நிறுத்தியுள்ளனர். இந்த சூழலில் சிறுமி காணாமல் போய் சில ஆண்டுகளில் காணாமல் போன சிறுமியின் தந்தையும் இறந்துள்ளார்.

இந்த நிலையில், சிறுமி காணாமல் போய் 9 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சிறுமி வீட்டின் 500 மீட்டர் தொலைவில் கண்டறியப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

6 வயதில் காணாமல்போன சிறுமி..9 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு.. மும்பையில் நெகிழ்ச்சி சம்பவம் !

பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில், சிறுமி வசித்த பகுதியில் இருந்த குழந்தை இல்லாத தம்பதியினர் குழந்தையை திருடியது தெரியவந்தது. பின்னர் சிறுமியை போலிஸார் மற்றும் பெற்றோர் தேடுவதை அறிந்த அவர்கள் சிறுமியை தாங்கள் சொந்த ஊரான கர்நாடகத்தில் உள்ள ஒரு காப்பகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

பின்னர் 2016ம் ஆண்டு அந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனால் இரு குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியாததால் சில ஆண்டுகளுக்கு பின்னர் அந்த சிறுமியை மீண்டும் மும்பைக்கு அழைத்து அங்கு குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு அந்த சிறுமியை அனுப்பியுள்ளனர்.

இப்போது சிறுமி சற்று வளர்ந்து விட்டதால் அங்கு யாருக்கும் அவரை அடையாளம் தெரியாமல் இருந்துள்ளது. இதன்பின்னர் சிறுமியின் மாமா ஒருவர் எதேச்சையாக சிறுமியை பார்க்கும்போது தனக்கு தெரிந்தவர் போல உணர்ந்ததால் சிறுமியின் தாய்,தந்தை புகைப்படங்களை சிறுமியிடம் காட்டியுள்ளார்.

6 வயதில் காணாமல்போன சிறுமி..9 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு.. மும்பையில் நெகிழ்ச்சி சம்பவம் !

அப்போது அதை சிறுமியால் நினைவுகூர முடிந்ததால் அவர் அந்த சிறுமி காணாமல் போன சிறுமிதான் என்பதை அவர் கண்டுபிடித்துள்ளார். பின்னர் இந்த தகவல் சிறுமியின் தாய்க்கு தகவல் தரப்பட்டுள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகளை நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்தித்துள்ளார்.

உடனே போலிஸுக்கு தகவல் தரப்பட சிறுமியை கடத்தியவர்கள் கைது செய்யபட்டுள்ளனர். 6 வயதில் காணாமல்போன சிறுமி 9 வருடங்களுக்கு பிறகு 16 வயது சிறுமியாக அவர் தாயிடம் சேர்ந்துள்ளது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories