இந்தியா

குளியல் வாளிக்குள் தவறி விழுந்த பச்சிளம் குழந்தை.. மூச்சு திணறி உயிரிழந்த சோகம் !

குளியல் வாளி தண்ணீருக்குள் மூழ்கி ஒன்றரை வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளியல் வாளிக்குள் தவறி விழுந்த பச்சிளம் குழந்தை.. மூச்சு திணறி உயிரிழந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை அடுத்த கடையங்காடு என்ற இடத்தில் கிரீஸ் -அஞ்சலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் சபரி என்ற ஆண் குழந்தை இருந்தது.

குளியல் வாளிக்குள் தவறி விழுந்த பச்சிளம் குழந்தை.. மூச்சு திணறி உயிரிழந்த சோகம் !

இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் அஞ்சலி, குழந்தையை தூங்க வைத்து விட்டு துணி துவைப்பதற்காக சென்று விட்டார். அப்போது துணியை காயவைத்துவிட்டு திரும்பி வந்து பார்க்கையில், குழந்தை சபரி குளியல் வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கி கிடந்துள்ளது.

இதனை கண்டவுடன் அதிர்ச்சியடைந்த தாய் அஞ்சலி குழந்தையை உடனே தூக்கி முதலுதவி செய்ய முயன்றுள்ளார். பின்னர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். ஆனால் குழந்தை முன்னரே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குளியல் வாளிக்குள் தவறி விழுந்த பச்சிளம் குழந்தை.. மூச்சு திணறி உயிரிழந்த சோகம் !

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளியல் வாளி தண்ணீருக்குள் மூழ்கி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories