இந்தியா

“சூறைக்காற்றுடன் கனமழை.. டெல்லியை மூழ்கடிக்க நினைக்கிறீர்களா?” : மோடி அரசை கடுமையாக சாடிய ஆம் ஆத்மி!

டெல்லியை மூழ்கடிக்க நினைக்கிறீர்களா என்று பா.ஜ.க தலைவர்களிடம் கேட்க விரும்புகிறேன் என ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளார்.

“சூறைக்காற்றுடன் கனமழை.. டெல்லியை மூழ்கடிக்க நினைக்கிறீர்களா?” : மோடி அரசை கடுமையாக சாடிய ஆம் ஆத்மி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தலைநகர் டெல்லி மற்றும் அதன்சுற்றுவட்டாரப்பகுதியில் நேற்று முன் தினம் முதல் மழை பெய்து வருகிறது. மேலும் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்ததால், அங்கு கடுமையாக வெப்பநிலை குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, டெல்லியில் மணிக்கு 60 முதல் 90 கி.மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை முதலே சூறைக்காற்றுடன் டெல்லியில் சாரல் மழை பெய்தது

இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் சூழந்தது வீடுகளுக்குள் கழிவுநீர் உள்ளிட்ட தண்ணீர் புகுந்துள்ளதாக அம்மாநில மக்களின் நிலை முற்றிலும் முடங்கி போயுள்ளது. பருவமழைக்கு முன்னதாக அங்குள்ள கால்வாய்களை தூர்வாராததால், மழை நீர் செல்லவழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் வடிகால்களை தூர்வாராமல் இருப்பதாக கடந்த பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டு வருகிறது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி துர்கேஷ் பதக் கூறுகையில், ஒன்றிய பா.ஜ.க அரசின் கட்டுபாட்டில் இருக்கும் எம்.சி.டிகளின் செயலற்ற தன்மைக் காரணமாக, டெல்லியில் பல ஆண்டுகளாக மழைக்காலங்களின் கடுமையான வெள்ளப்பாதிப்புகளில் சிக்கியுள்ளது.

பருவமழை நெருங்கியுள்ள சூழலில், தற்போதுவரை வடிகால்கள் சுத்தம் செய்யப்படவில்லை. தற்போது உள்ள வடிகால் அமைப்பை சுத்தம் செய்ய 1,000 ஜே.சி.பி.கள் தேவைப்படும் நிலையில், 50 ஜேசிபி இயந்திரங்கள்கூட இல்லை.

இந்த நிலைமையை வைத்துக்கொண்டு டெல்லியை மூழ்கடிக்க நினைக்கிறீர்களா என்று பா.ஜ.க தலைவர்களிடம் கேட்க விரும்புகிறேன். பா.ஜ.க அரசு உடனடியாக வடிகால்களை சுத்தம் செய்யத் தொடங்க வேண்டும்.இதில் தாமதம் செய்வது டெல்லி மக்களை ஏமாற்றுவதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories