இந்தியா

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை வெட்டி கொலை செய்த வாலிபர்.. கேரளாவில் பகீர் சம்பவம்: பின்னணி என்ன?

கேரளாவில் மருமகளை வெட்டி கொலை செய்த தாய்மாமனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை வெட்டி கொலை செய்த வாலிபர்.. கேரளாவில் பகீர் சம்பவம்: பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அடுத்த வர்க்கலா பகுதியைச் சேர்ந்தவர் ஷாலு. இவரது கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் ஷாலு கடந்த 28ம் தேதி தனது வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அவரை வழியில் தடுத்து நிறுத்திய, அவரது மாமன் அணில் என்பவர் திடீரென தான் எடுத்து வந்த கத்தியை எடுத்து ஷாலுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் , ரத்த வெள்ளத்திலிருந்த ஷாலுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அணிலை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories