இந்தியா

Porn படத்தில் நடித்ததாக சந்தேகப்பட்டு மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்.. கர்நாடகாவில் அதிர்ச்சி!

ஆபாச படத்தில் நடித்ததாக சந்தேகத்தின் பேரில் மனைவியை, கணவன் கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Porn படத்தில் நடித்ததாக சந்தேகப்பட்டு மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்.. கர்நாடகாவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் ஜஹீர் பாஷா. இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ளன. இவர் ஆபாசப் படம் பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் ஆபாசப்படம் ஒன்றை பார்த்தபோது, அதில் இருந்த பெண், தன் மனைவி போல் இருந்ததால் அவர்தான் இந்தப் படத்தில் நடித்துள்ளதாக சந்தேகப்பட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசப் படம் தொடர்பாக மனைவியை அடித்து தகராறு செய்துள்ளார். அப்போதுதான், கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை இருப்பது குடும்ப உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் மனைவியிடம் ஜஹீர் பாஷா சண்டைபோட்டுள்ளார். அப்போது, ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குழந்தைகள் முன்னிலையிலேயே மனைவி குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து அவரின் மூத்த மகன் தனது தாத்தாவிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இதுகுறித்து போலிஸாருக்கு புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஜஹீர் பாஷா கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories