இந்தியா

கபடி விளையாட களமிறங்கி தவறி விழுந்த ஆந்திர சபாநாயகர்.. கை முறிந்ததால் பரபரப்பு!

கபடி விளையாடி சபாநாயகர் கையை உடைத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கபடி விளையாட களமிறங்கி தவறி விழுந்த ஆந்திர சபாநாயகர்.. கை முறிந்ததால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கபடி விளையாடும்போது ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகர் கையை உடைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக இருப்பவர் தம்மினேனி சீதாராம். இவர் இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீகுளத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்தார்.

ஆட்டத்தை தொடங்கி வைக்கும்போது அவர் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக கபடி விளையாட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்ததில் அவரது கை லேசாக முறிந்தது.

இதனையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் பதறிப்போய் அவரை தூக்கினர். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories