இந்தியா

”அநீதியையும், சமத்துவமின்மையையுமே ’நீட்’ பறை சாற்றும்” - புள்ளி விவரங்களை அடுக்கிய ப.சிதம்பரம் !

மாபெரும் சமத்துவமின்மையையும் அநீதியையும் நிலை நாட்டக் கூடிய யுகத்தை "நீட்’’ தேர்வு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

”அநீதியையும், சமத்துவமின்மையையுமே ’நீட்’ பறை சாற்றும்” - புள்ளி விவரங்களை அடுக்கிய ப.சிதம்பரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"நம்பத்தகாத "தகுதி" என்ற கொள்கை மூலம் பெருமளவில் மாபெரும் சமத்துவமின்மையையும் அநீதியையும் நிலை நாட்டக் கூடிய யுகத்தை "நீட்’’ தேர்வு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது என்று ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

"தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ ஆங்கில நாளேட்டில் "பெருமளவில் தாக்கும் சமத்துவமின்மையும் அநீதியும்’’ என்றத் தலைப்பில் தமிழகத்தைப் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

அந்தக் கட்டுரைக்கு ‘நம்பத்தகாத "தகுதி’’ (மெரிட்) என்ற கொள்கை மூலம் மாபெரும் சமத்துவமின்மை மற்றும் அநீதி யுகம் பறைசாற்றப்படுகிறது’ என்று துணைத் தலைப்பு ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு இடையிலான ஓர் உடன்படிக்கையாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்று பட்டியல்கள் ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல். இரண்டாவது பட்டியல் (மாநிலப் பட்டியல்) 11வது நுழைவில், மூலத்தில் இயற்றப்பட்ட சட்டம் கூறுகிறது; பல்கலைக் கழகங்கள் உள்பட கல்வி முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரிவுகளான நுழைவுகள் 63, 64, 65 மற்றும் 66 ஆகியவையும் மூன்றாவது பட்டியலின் 25வது நுழைவும் ஆகும்.

மூன்றாவது பட்டியலான (பொதுப்பட்டியல்) நுழைவு 25 மூலத்தில் இயற்றப்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. தொழில் கல்வி மற்றும் வேலைக்கான தொழில்நுட்பப் பயிற்சி என்பதாகும்.

ஒரு சம்மட்டி அடித் தாக்குதல்!

நுழைவுகள் 63 முதல் 66 வரை எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் அவற்றுள் சில பெயரிடப்பட்ட நிறுவனங்கள், ஒன்றிய அரசால் நிதி உதவி அளிக்கப்படும் பயிற்சி நிலையங்கள் கல்வி நிலையங்கள் பற்றி குறிப்பிடுகிறது. அவற்றுக்கு சில தரங்களை நிர்ணயித்துள்ளன. கொள்கை அடிப்படையில் "கல்வி’’ என்பது ஒரு மாநில அரசின் படைப்பு ரீதியாக அளிக்கப்படும் விளக்கங்களின் அடிப்படையில் "கல்வி’’ ஒரு மாநில அரசின் துறை என்பது நிலை நாட்டப்பட்டுள்ளது. அந்தப் பட்டியல் கீழ்க்கண்டவாறு மீண்டும் எழுதப்பட்டது:

தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் பல்கலைக் கழகங்கள் உள்பட கல்வி, முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள நுழைவுகள் 63,64, 65 மற்றும் 66 ஆகிய பிரிவுகளின் துறைகள், தொழில்கல்வி மற்றும் வேலைக்கான தொழில் நுட்பப்பயிற்சி ஆகியவையும் அதில் அடங்கும். சம்மட்டி அடித் தாக்குதல் என்பது கூட்டாட்சி முறைக்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும், சமூக நீதிக்கும் எதிரானதாகும். நெருக்கடி நிலை எதிர்ப்புப் போராளிகளால் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கான 44வது திருத்தம் (42வது திருத்தத்தின் பாதிப்புகளை திருத்துவதற்காக இது செய்யப்பட்டது) "கல்வி’’ தொடர்பான மூல நுழைவுகளை மீண்டும் கொண்டு வருவது அவசியம் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லை.

”அநீதியையும், சமத்துவமின்மையையுமே ’நீட்’ பறை சாற்றும்” - புள்ளி விவரங்களை அடுக்கிய ப.சிதம்பரம் !

சரித்திர பூர்வமாக மாநிலங்கள் மருத்துவக் கல்லூரிகளை அமைத்துள்ளன. மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளித்துள்ளன. இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மாநிலங்கள் முறைப்படுத்தியுள்ளன. கல்வித் தரங்களும் காலப்போக்கில் மேம்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த கல்லூரிகளிலிருந்து வணக்கத்திற்குரிய மருத்துவர்கள் (டாக்டர்கள்) வெளிவந்தனர். தமிழ்நாட்டில் உடனடியாக நினைவுக்கு வரும் அத்தகைய மருத்துவர்களின் பெயர்கள் டாக்டர் ரங்காச்சாரி மற்றும் டாக்டர் குருசாமி முதலியார் ஆகியோர் ஆவர். அவர்களுடைய சிலைகள் பாதுகாப்புத் தேவதைகளைப் போல சென்னை மருத்துவக் கல்லூரி முகப்பில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்வியிலும், சுகாதார செயல்பாட்டாலும் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியக் கருத்து என்னவென்றால் பிரபலமான மருத்துவர்கள் (டாக்டர்கள்) (அத்தகையவர்கள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் உள்ளனர்) அவர்கள் எல்லாம் அகில இந்திய தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படவில்லை.

மாநில உரிமைகளை அங்கீகரித்தல்!

இதில் மாநிலங்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி அறிவித்ததற்கான வழக்கு: மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் அந்த மாநில மக்களின் குழந்தைகளைக் கல்லூரிகளில் சேர்ந்து ஆங்கிலத்தில் மருத்துவத்தைக் கற்பிக்கின்றன. காலப்போக்கில் தங்கள் மாநிலத்தின் ஆட்சி மொழியான, மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழிகளில் அவை கற்பிக்கப்படலாம். மருத்துவப் (டாக்டர்கள்) பட்டதாரிகளாக ஆக்கப்படுபவர்கள் பெருமளவில் மாநிலத்தின் மக்களுக்கு, சிறப்பாக கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு சேவை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்குதான் சுகாதார சேவைகள் வேதனைக்குரிய வகையில் போதுமானவையாக இல்லாமல் உள்ளன. அவர்கள் பெருமளவில் மக்களிடம் பேசி, விளக்கமளித்து, மருத்துவ சிகிச்சை அளித்து, நோயாளிகளுக்கு ஆலோசனைகளை (கவுன்சில்) தங்கள் மொழியில் வழங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாநில அரசின் ஒழுங்கு முறைகள் மூலமும் சமூகநீதிப் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. அவர்கள் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிக்கின்றன.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், வசதி வாய்ப்புப் பெறாத பிரிவுகளைச் சேர்ந்த, முதல் தலைமுறையில் பயிலும் மாணவர்கள் போன்றோர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படுவது ஊக்குவிக்கப்படுகின்றன. மாநிலங்களில் உள்ள எவரும் தற்போது உள்ள நடைமுறையை குறை கூறவில்லை. குறைந்தபட்சம் தமிழ்நாட்டிலும், மகாராஷ்டிராவிலும், என் அறிவுக்கு எட்டிய வகையில் தென் மாநிலங்களிலும் இந்த நிலையே உள்ளது. உண்மையில் தீர்க்கப்பட வேண்டிய மோசமான பிரச்சினைகள் உள்ளன. கேபிடேசன் கட்டணங்கள், கூடுதலான கட்டணங்கள், தரம் குறைவான சாதனங்கள், போதுமான அளவுக்கு மருத்துவமனைகள் இணைக்கப்படாமை பரிசோதனைச் சாலைகள், நூலகங்கள், விடுதிகள் மற்றும் விளையாட்டுத் திடல் போன்ற வசதிகள் மேலும் பல வசதிகள் போதுமான அளவில் இல்லை. மாநிலங்கள் மாணவர்களின் சேர்க்கையை ஒழுங்குபடுத்தி வந்த போதிலும் அல்லது சில மத்திய அதிகாரங்கள் ஈடுபட்ட போதிலும் இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. அவைகளும் தீர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஒன்றிய முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்

banner

Related Stories

Related Stories