மத்திய பிரசேத மாநிலம், சிங்க்ராலி மாவட்டத்திற்குட்பட்ட ஜெய்ந் சவுக்கி ரயில்வே பாதை அருகே மூதாட்டி ஒருவர் தனது சகோதரியுடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, குடிபோதையிலிருந்து ஐந்து பேர் கொண்ட கும்பல் மூதாட்டியை அருகே இருந்த புதருக்குள் இழுத்துச் சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
பின்னர், பாதிக்கப்பட்ட மூதாட்டி அவராகவே காவல்நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் தலைமறைவாக இருந்த ஐந்து பேரையும் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் இரண்டு பேர் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் அண்மையில் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், மத்திய பிரதேச மாநிலத்தில் 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 26,708 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல 37 பாலியல் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் 27,827 சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளதாக வழக்குள் பதிவாகியுள்ளது.
இது போன்று பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலை அரங்கேறுவது அந்தந்த மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதோடு பாஜக அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை அதிகபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.