இந்தியா

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை கேட்கும் சுப்ரீப் கோர்ட் : 10 மாநிலங்களுக்கு ஆணை!

முதல்கட்டமாக 10 மாநிலங்கள் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரங்களை திங்கள் கிழமைக்குள் ஆணையத்துக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை கேட்கும் சுப்ரீப் கோர்ட் : 10 மாநிலங்களுக்கு ஆணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவல் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரங்களை திங்கள் கிழமைக்குள் வழங்க 10 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(Telangana, Tamil nadu, kerala, Karnataka, Gujarat, Rajasthan, UP, Bihar, Jharkhand) இந்த 10 மாநிலங்கள் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்களை செயல்படுத்த செயலாளர் மட்டத்திலான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குழந்தைகளின் விபரங்களை மத்திய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசானது பி.எம் கேர் நிதியம் மூலம் இந்த குழந்தைகளுக்காக வகுத்துள்ள திட்டங்கள் அனைத்தையும் திங்கள் கிழமைக்குள் தெரிவிக்கும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று குழந்தைகள் காப்பகங்கள் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த ஆண்டு 9346 முதல் குழந்தைகளின் பெற்றோர் கொரொனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பல மாநிலங்களின் கணக்குகள் குழந்தைகள் நல ஆணையத்துக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக 10 மாநிலங்கள் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரங்களை திங்கள் கிழமைக்குள் ஆணையத்துக்கு தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதல்கட்டமாக இந்த 10 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories