இந்தியா

"ஆம்புலன்ஸ்ல ஏன் வரல..? அட்மிஷன் கிடையாது” - மருத்துவமனையின் அலைக்கழிப்பால் உயிரிழந்த பேராசிரியை!

பேராசிரியை ஒருவரை அரசு மருத்துவமனைகளால் அலைக்கழிக்கப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"ஆம்புலன்ஸ்ல ஏன் வரல..? அட்மிஷன் கிடையாது” - மருத்துவமனையின் அலைக்கழிப்பால் உயிரிழந்த பேராசிரியை!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குஜராத்தில் பேராசிரியை ஒருவரை அரசு மருத்துவமனைகளால் அலைக்கழிக்கப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் உள்ள மத்திய பல்கலைக்கத்தில் ஸ்கூல் ஆப் நானோ சயின்ஸ் துறை பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் இந்திராணி பானர்ஜி. இவருக்கு கடந்த ஏப்ரல் 2ஆம் தேதியன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது

இதையடுத்து, அவரது மாணவர்களும், சக பேராசிரியர்களும் இந்திராணி பானர்ஜியை காந்திநகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரது ஆக்ஸிஜன் அளவு 90 முதல் 92 சதவீதமாக இருந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் அப்போது போதிய படுக்கை வசதி இல்லாததால், அவரை வேறு தனியார் மருத்துவமனையில் சேர்க்கும்படி ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால், அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு போதிய ஆக்ஸிஜன் வசதி இல்லை எனக் கூறியுள்ளனர்.

இதற்கிடையே பேராசிரியை இந்திராணிக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே, ஏப்ரல் 3ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மாநகராட்சி கொரோனா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், ஈ.எம்.ஆர்.ஐ 108 ஆம்புலன்சில் கொண்டு வரவில்லை எனக் கூறி மருத்துவமனையில் அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் மீண்டும் காந்திநகர் மருத்துவமனைக்கே கொண்டு சென்றனர்.

அதற்குள் பேராசிரியை இந்திராணியின் ஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்து நிலைமை மோசமடைந்துள்ளது. அதிகாலை 2 மணியளவில் அவருக்கு ஆக்ஸிஜன் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் சரியான நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் தாமதமானதால் இந்திராணி முகர்ஜி உயிரிழந்தார். அரசு மருத்துவமனையின் அலைக்கழிப்பால் பேராசிரியை உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இந்திராணி பானர்ஜி, துறைரீதியாக புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சிகிச்சை அளிக்கவே குஜராத அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் காட்டப்பட்டுள்ளது சாமானிய மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories