இந்தியா

“இந்தியாவின் தொன்மையான மொழி தமிழ்; தமிழர்கள் பெருமைக்கொள்வதில் நியாயமே!” - ப.சிதம்பரம் ட்வீட்

இந்தியாவின் தொன்மையான மொழி தமிழ் என்று தமிழர்கள் பெருமைப்படுவது நியாயமானது என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் தொன்மையான மொழி தமிழ்; தமிழர்கள் பெருமைக்கொள்வதில் நியாயமே!” - ப.சிதம்பரம் ட்வீட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தி மொழி தினத்தை முன்னிட்டு நேற்று (செப்டம்பர் 14) இந்தி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ ஒருபடி மேல் சென்று இந்தியாவை ஒருங்கிணைக்கும் மொழியாக இந்தி திகழ்கிறது என்றெல்லாம் பேசியிருந்தார். இது நாட்டை இந்து ராஷ்டிராவாக மாற்ற முனையும் பாஜகவின் கொள்கையாக இருப்பது அனைவரும் அறிந்திருதாலும், பன்முகத்தன்மைக் கொண்ட நாட்டின் பாரம்பரியத்தை ஒருங்கிணைக்க சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எவ்வாறு ஒற்றுமையை வலுப்படுத்தும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய மக்கள் பேசும் மொழிகளிலேயே தமிழ் மொழிதான் பழமையான மொழி. ஆகவே, தமிழர்கள் பெருமை அடைவது நியாயமே எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பதிவு செய்துள்ள ட்டுவிட்டர் பதிவில் ” இன்று இந்தி தினம் என்று இந்தி மொழி பேசும் மக்கள் பெருமைப்படுகிறார்கள். அவரவர் மொழியை அவரவர் கொண்டாடுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். தமிழ் மொழி இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே” என்றும்

இதைத் தொடர்ந்து, ”கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் தொல்லியல் அகழாய்வுகள் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளன என்பதும் நமக்குப் பெருமையளிக்கிறது” என்று தனது ட்டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories