இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 75,760 பேர் பாதிப்பு - கொரோனாவை கட்டுப்படுத்த மோடி அரசிடம் என்ன திட்டம் உள்ளது?

இந்தியாவில் ஒரே நாளில் 75 ஆயிரம் பேருகு தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் ஒரே நாளில் 75,760 பேர் பாதிப்பு  - கொரோனாவை கட்டுப்படுத்த மோடி அரசிடம் என்ன திட்டம் உள்ளது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 24,332,275 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 829,666 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 6,000,365 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் ஒரே நாளில் 75,760 பேர் பாதிப்பு  - கொரோனாவை கட்டுப்படுத்த மோடி அரசிடம் என்ன திட்டம் உள்ளது?

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,023 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,10,235-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58,390-லிருந்து 60,472-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைப்பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 25,23,772 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7,04,348-லிருந்து 7,25,991 ஆக உள்ளது.

தற்போதைய கணக்குகள் படி குணமடைவோர் 76% ஆக உள்ளது. கொரோனாவால் நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு என்பது நீடிக்கிறது. அதுமட்டுமல்லாது, கடந்த 20 நாட்களில் மட்டும் 13 லட்சம் பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 75,760 பேர் பாதிப்பு  - கொரோனாவை கட்டுப்படுத்த மோடி அரசிடம் என்ன திட்டம் உள்ளது?

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது.

இதனிடையே புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய 4வது ஊரடங்கு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. ஊரடங்கு தளர்வு குறித்து பேசும் மோடி அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த மோடி அரசிடம் என்ன திட்டம் உள்ளது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories